வழக்கறிஞர், ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்.கோணேஸ் தம்பிக்கு ஓர் மடல் !

பணிகள் மென்மேலும் சிறக்க கோணேஸ்வரப் பெருமாள் தான் பணிந்து வாழ்த்துகிறேன்.


விமல் சொக்கநாதன்

இலண்டன் வழக்கறிஞர், ஊடகவியலாளர்

தம்பிக்கு ஓர் மடல்

கோணேஸ் பணிகள் மேன்மேலும் சிறக்க கோணேஸ்வரப் பெருமான் தாள் பணிந்து வாழ்த்துகிறேன்.

70களில் ஆரம்பம். தொலைக்காட்சி என்பது ஈழத்தமிழர்களை எட்டாத காலப்பகுதி. து ஈழத்து
ஊடகங்கள் என்றால் அது அச்சு ஊடகங்களையும் இலங்கை வானொலியையும் மட்டுமே குறிப்பிட்டது.70களின் ஆரம்பத்தில் ஈழத்தில் தமிழ்த் தொலைக்காட்சி எதுவுமே கிடையாது. ஒரேயொரு வானொலி நிலையம். அது அரசாங்கம் நடத்தும் இலங்கை வானொலி மட்டுமே. அரச வானொலியாக இருந்தாலும் அதன் நிலையப் பொறுபபில் கல்விமான்களும், மூத்த நிர்வாகிகளும் கலா ரசனையூடன் பணியாற்றி வந்ததால், ஊழல்கள், அரச தலையீடுகள் அப்போது மிகக் குறைவு. இதனால் தான் முன்னாளில் இலங்கை வானொலியில் பணியாற்றியவர்களுக்கு இன்றும் தனி மதிப்பு இருந்து வருகிறது.1970களில் இலங்கை வானொலி தேசிய சேவை, வர்த்தக சேவை இரண்டிலும் நிரந்தர அறிவிப்பாளராக நான் பணியாற்றிய நாட்களில் நேயர்களுக்குப் பிடித்தமான இசையும் கதையும்இ என் விருப்பம், கதம்ப இசை, ஆடவர் அரங்கு, அறிவிப்பாளரோடு அரை மணி நேரம் உட்பட பல நிகழ்ச்சிகளை நான் தயாரித்து ஒலிபரப்பி வந்தேன்.
அன்றைய இளைய தலைமுறையினருக்கு தென்னிந்திய சினிமாப்பாடல் மோகம் உச்சத்தைத் தொட்டிருந்தது. எனவே ஈழத்து தமிழ்க் கலைஞர் யாராவது எங்கள் தாய்வழி உறவுகள் எவராவது சினிமா அல்லாத பாடல்களை பாட முற்பட்டால் அது வெறுக்கப்பட்டது. ஈழத்துப்பாடல் என்றாலே எம்மவர்கள் பலருக்கு நக்கலும், நையாண்டியும் தான்.
உரிய இசைக்கருவிகள் இல்லாமை, ஒலிப்பதிவூத் தொழில்நுட்பம் போதாமை எங்கள் இளசுகளை ரசிக்கவிடாது பிரித்து வைத்தன. இந்த வேளையில் தான் அந்த நல்ல மாற்றம் நிகழ்ந்தது.திருமலையில் எம்.பி. பரமேஸ்இ எம்.பி. கோணேஸ் ஆகிய இரு துடிப்பான இளைஞர்கள் புதிய இசைக்கருவிகளுடன் வெளியிட்ட புதிய பாடல் இசைத்தட்டுக்கள் இளம் உள்ளங்களை சுண்டி இழுக்க ஆரம்பித்தன. நானும் என் ஒலிபரப்புத்துறை ஆட்களும் இந்த இசைத்தட்டுக்களை அவ்வப்போது எமது நிகழ்ச்சிகளில் சேர்த்து பிரபல்யமாக்க உதவினோம்.

1968இல் பரமேஸ் கோணேஸ் குழுவினர் திருமலையில் உதயமாகி இலங்கை வானொலி மூலம் ஈழத்தவர் மனதில் புகுந்து கொண்டனர்.

தம்பி எம்.பி கோணேஸ் இசையமைக்க, அண்ணன் எம்.பி. பரமேஸ் தமது கணீர் குரலால் அலங்கரித்த பாடல்கள்:

உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது?

நீ வாழும் இடம் எங்கே?

நீ இன்றி நிலவு கே.ஆர். கமலாவூடன் இணைந்து பாடியது.

இலங்கை வானொலியூம் அதன் அறிவிப்பாளரக் ள் சிலரும் திருமலை பரமேஸ், கோணேஸ் குழுவினரையும் மட்டுந்தான் வளர்த்து விட்டார்கள் என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது.

சின்ன மாமியே புகழ் நித்தி கனகரத்தினம்
வடை வடை என சுட்டு வந்தாள் வாயாடிக்கிழவி புகழ் ஏ.ஈ. மனோகரன் இப்படிப்பலர்.

இது கணனி யுகம்இ ஒரு இசைஅமைப்பாளருக்குத் தேவை ஒரு நவீன கணனி மட்டுமே. 45 வருடங்களுக்கு முன் 1970 களில் ஒரு இசை அமைப்பாளருக்குத் தேவை 100 அல்லது 200 இசைக்கருவிகளும் கலைஞர்களுமே.

அப்படியான ஆதரவூகள் குறைவான, மிகவூம் கஷ்டமான காலகட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர்கள் எம்.பி. பரமேஸ்இ எம்.பி. கோணேஸ் குழுவினர்.

இன்று அவர்களின் புகழ் கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து என்று பல நாடுகளையும் தொட்டு நிற்கிறது.
இசை என்பது காதுவழியே புகுந்து இதயத்தை வருடிவிட்டு மகிழ்ச்சியூட்டும் ஒரு உன்னதமான கலை. அந்தக் கலையை சரிவரக் கையாளத் தெரிந்தவர்கள் சிகரத்தில் ஏற முடியும்.

தம்பி கோணேஸ் அவர்களுக்கும், அவரது குழுவூக்கும் என் வாழ்த்துக்கள்.