வாழ்ந்தால் இவர்களைப்போல வாழவேண்டும்

 

மாவீரன் பண்டாரவன்னியனால் பெருமைகொண்ட ஊரான அடங்காப்பற்றின் கற்சிலைமடுவைப் பூர்வீகமாகக்கொண்ட கனகசபை(காசிப்பிள்ளை) பரமேஸ்வரி தம்பதிகள். எந்த நிலையிலும் இவர்களின் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறையிருந்ததில்லை.

–நோயோ வறுமையோ இவர்களது சிரிப்பை குறைத்துவிட முடியாது.

–இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை .இருந்தும் பல பிள்ளைகளுக்கு தாய் தந்தையர் இவர்கள் தான்.

–தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒரு முக்கியமான நபராக கருதப்பட்ட தமிழீழபோக்குவரத்துக்கழகம்,பாண்டியன்,பண்ணைகள் என பொருளாதாரத்தை தக்கவைத்த முக்கிய பொறுப்பாளரான குட்டி(எம்.ஆர்.எஸ் குட்டி)அவர்களுடைய சொந்த பெரியம்மாவும் பெரியப்பாவுமே இவர்கள்.அவரை சிறுவயதிலிருந்து வளர்த்தவர்களும் இவர்களே.

–முள்ளிவாய்க்காலில் இறுதிவரை இருந்து சிறு காயம்கூட இல்லாது உயிர்தப்பியவர்களின் கதை மிகப்பெரியது.நடக்கமுடியா மனைவியை கடைசிவரை கைவிடாது சேற்றுப்பகுதிக்கூடாக கொண்டுவந்த அந்த அன்பையும் நெருக்கத்தையும் எப்படிச் சொல்வது.

–இவர்கள் இன்றும் நோய்நொடியிலும் உடைந்து போகாமல் இருப்பது எனக்கு வியப்பே. இவர்கள் வேறுயாருமல்ல எனக்கு அம்மம்மாவும் அம்மப்பாவும்(என் தாயின் பெரியம்மாவும் பெரியப்பாவும்).
இவர்கள் நீண்டகாலம் வாழ எங்கள் குலதெய்வம் நாகம்மாள் அருள்புரியட்டும்.
–வன்னியூர் செந்தூரன்–