விதி வரைந்த பாதைஅருள் நிலா வாசன்

உபதேசங்களின்றி
சுயபுத்தியில் தேர்ந்தெடுத்த
உன் கட்சித்தாவல்
உள் நோக்கமேயின்றி
ஊருக்கு வந்தவுடன்
உரு மாறிய ஏவல்
ஹ்ம்ம் இதை நாம்
நம்பித்தான் ஆகவேண்டும் …

கூட்டு சேர்ந்ததனால்
கொக்கரிக்கும் சேவல்
சில கோடிகளைக்
கண்டதனால்
இன்று கொடி பிடிக்கும் ஆவல்

மென்று நீ
விழுங்க முன்னர்
உன்னையே
விழுங்க
அன்று வரும்
ஒரு பூதம் ……

வெள்ளாட்டு மந்தையில்
வேறு நிறம் மாற்றி
வேலி பாய்ந்த
உன் சிந்தையில்
சிதறடிக்க
யார் சொன்னது
வியாழ சுகமென்று..?

நீ
ஏந்திப் பிடிக்க
எத்தனிக்கும்
ஒற்றை
வேகத்தில்
ஊர் பேர் தெரியாமல்
உனக்கென்று
ஒரு தனியிடம்
உள்ளூரில் காத்திருக்கும்…

அங்கு கட்சிகள் இருக்காது
புழு தின்னும்
பட்சிகள்
திட்டமிட்டுப் பறக்கும்
பழி தீர்த்த நேரம் மட்டும்
விதி வரைந்த பாதையென்று
உன்னோடு இறக்கும்….