வினாப் பெண்ணே கவிதை வர்ணநேசன்

 

வர்ணத்தை உன்தன் மேனியில் வரைந்து ,
வானத்தையும் வனத்தையும் வலம்வரும்,
வண்டினத்தின் முடிசூடா வடிவழகி-நீயோ?
வனப்பு உனக்குக்கிடைத்த நல்ல வரமோ?
வாசமலர்கள் எப்போதும் உந்தன் வசமோ?
வாடாமலர்தேடி வஞ்சகமாய் கள்பறிக்கும்-நீ
வாடைக்காறால் தள்ளாடுகிறாயோ? இல்லை
வடிந்த கள்ளுண்ட போதையோ சொல்லடி?
வனராணி நீயென்று உன்வாசகர்கள் கூறினர்.
வஞ்சியுந்தன் பெயர்தான் என்னவோ ? என்
வாசகரிடமே வினவுகிறேன், வினாப்பென்னே!!!

ஆக்கம்வர்ணநேசன்