வீர பத்தினிகள்….!


காலா
காலமாக
பூட்டிய
விலங்கினை
புனிதப்
போருக்காய்
உடைத்து
எழுந்தோம்..!

அண்ணண்
காட்டிய
வழிகளில்
வாஞ்சையுடன்
வித்தைகள்
பயின்று
தடம் பதித்தோம்..!

ஊர் அழுத
காலம்
போர் வெறி
கொண்டு
களம் நோக்கியது
நம் கால்கள்..!

போர்
மூண்டது
ஊர் திரண்டது.
சமராடினோம்
பார் மிரண்டது..
இழந்தவை
எண்ணில்
அடங்காது.

அங்குலமேனும்
பறி போதல்
ஆகாது எனும்
இலட்சிய
வேட்கை தாண்டவம்
ஆடியது.தணியாத
தாகம் நெஞ்சினிலே.
என்றுமே பணியாது.

விடுதலைத்
தேர் உலா
உன்னதமனது.
காட்டிக் கொடுப்பு
களை கட்டியது.
வடம் அறுந்தது
நடு வீதியில்
விடுதலைத் தேர்
அநீதி வென்றது..!

கால் ஒன்று
காணாமல் போனது
என் உறுதி
மட்டும் என்னோடு
தவம் இருக்கின்றது.
தமிழ் நிமிரும்
அது வரை….!

ரி.தயாநிதி