வெற்றிகரமாக 29/06/19 நடைபெற்று முடிந்தது உறவுகளின் சங்கமம் நிகழ்வு

அனைத்து உலகத்தமிழருக்கும் வணக்கம் ??????
29/06/19 நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த உறவுகளின் சங்கமம் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் வர்த்தக பெருமக்களுக்கும்!
யேர்மனி உட்பட அனைத்து நாடுகளிலும் இருந்து வந்து நிகழ்வு சிறப்புற நடாந்தி தந்த அனைத்து கலைஞர்களுக்கும்!
குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் பணத்துக்காகவும் சுயநலத்திற்காகவும் ஓடும் கலைஞர்கள் மத்தியில் எமது தாயகத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைந்த இந்த நல்ல உள்ளவர்களுக்கு உலகத்தமிழர் தமிழர் சார்பாக தலைசாய்த்து வணங்குகின்றோம். ??????
மற்றும் ஸ்ருட்காட் உள்ள எமது மாணவச்செல்வங்கள் தந்த சிறப்பான நடனத்திற்கும்!
எமது அமைப்பை நம்பி தாங்களாகவே முன்வந்து எமது தாயக மக்களுக்காக பணம் மட்டுமல்லாமல் தங்க நகையைக்கூட??? கையளித்த உறவுகளுக்கும்,!சிறந்த முறையில் ஒளி, ஒலி அமைப்பினருக்கும் மற்றும் எமது அமைப்பினருக்கும்,மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளுக்கும்,!மற்றும் !
உண்மையை உணர்ந்து பல அழுத்தத்தில் மத்தியிலும் எமது அமைப்புடன் கரம்கோர்த்து சிறப்பித்த அனைத்து மக்களுக்கும்.!
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் பல கோடி??????!