வெளிநாடும் நாமும்

பகல் கனவாய் நினைக்கவில்லை
நிஜமான வாழ்வென்று வந்தால்
வெளிப் பூச்சில் மட்டுமே
வண்ணங்கள்
வெயில் உருக்கி
பனி நனைத்து தடிமல்
காய்ச்சல் என
சுருண்டு படுத்தாலும்
தட்டி எழுப்புகிறான் அதிகாலையில்
களம் போவென

வலித்தாலும் அம்மா என்று அழ
மனம் இல்லை
அணைத்து தழுவ வரமாட்டார் என்று
இரும்பு கவர் சப்பாத்தும்
றப்பர் தொப்பியும்
பாரமோ பத்து கிலோ
படுத்தால் நித்திரை வரும்
எழும்ப முடியா கால் நோவு

கருமுகிலாய் வளர்த்து வைத்த
முடி மொட்டை போட்டு
வியர்வையும் வழுக்கி விழுகிறது
சுடு தண்ணி குளியல்
நரம்பும் அவிந்து போகிறது

இளமை தொலைத்தோம்
இளமுதுமை வாங்கி கொண்டோம்
காசுக்கு எம்மை விற்றோம்
அமைதி அற்ற சாப்பாடு தின்று

சுதர்சன்