வேண்டாமெனில்

கரும்பாக
இனித்தாலும்
கட்டெறும்பும் மொய்க்காது.
அரும்பாத
மலரிடம் வண்டினமும்
திரும்பாது.
துரும்பாக
தூக்கி எறிந்தாலும்
தனித்துவம் குன்றாது.
இரும்பாக
மனமிருந்தால்
காந்தம் கூட கவராது.
விரும்பாத
விழிகளில்
இமைகள் கூட துடிக்காது.
நெருங்காத
வரையில் விரல்களும்
வீணையை மீட்காது.
பொருந்தாத
சாவிகளால் மன
பூட்டுக்கள் திறபடாது.
பருவங்கள்
கடந்தாலும் புருவங்கள்
இடம் மாறாது.
சூழ்நிலை
மனிதனை மாற்றினாலும்
நினைவுகள் அழியாது..

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி