ஸ்காபுடறோ நகரில் நடைபெற்ற செல்வி றெசீக்கா, செல்வன் றீகன் இரட்டை அரங்கேற்றம்

நேற்று 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுடறோ நகரில் நடைபெற்ற இரட்டை அரங்கேற்றம் மிகவும் சிறப்பாகவும் கர்நாடக இசையின் அர்த்தங்;களை நன்கு நிரூபிக்கும் சாட்சியமாகவும் இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழமையன்ற ஸ்காபுறோ ஆர்மேனியன் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றன.

ஆரம்பத்தில் நடைபெற்ற வாய்பாட்டு அரங்கேற்றத்தில் செல்வி றெசீக்கா றொகானினது ஆற்றல் நன்கு புலப்பட்டது. அவரது குரல் வளமும் இனிமையும் நேர்த்தியாக பாடிய இசை வளமும் சபையோரை அசையாமல் பரவசப்படுத்தின…

அடுத்து இடம்பெற்ற கர்நாடக இசைச் செல்வன் றீகன் றொகானின்து மிருதங்க அரங்கேற்றமும், கர்நாடக இசையின் உச்சத்தைத் தொடுவது பொல இருந்தது.

இன்னிசை வேந்தர் வாய்ப்பாட்டை பொறுப்பேற்று நேர்த்தியாக நகர்த்திச் செல்ல, கர்நாடக இசைச் செல்வன் றீகன் றொகானின்து மிருதங்க அரங்கேற்றமும், சிறப்பாக நடைபெற்றது.மண்டபம் நிறைந்து காணப்பட்ட இரசிகப் பெருமக்களும் இரண்டு அரங்கேற்றங்களை மிகவும் ரசிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்களும் மிருதங்கஞான வாருதி வாசுதேவன் இராஜலிங்கம் அவர்களும் நிறைவான இரட்டை அர்ஙகேற்றத்தை சிறப்பாக நடத்தியமை அங்கு ச மூகமளித்தவர்கள் மட்டுமல்ல கனடா வாழ் கர்நாடக இசை ரசிகர்கள் வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு பேசு பொருளாக இருப்பதும் இந்த அரங்கேற்றங்களின் சிறப்புத் தன்மையை பாதுகாக்கின்றன என்நால் அது மிகையாகாது.

வணக்கம் இது உஸ் ரி STS தமிழ் யேர்மனி