இன்று(04.06.17) யேர்மனி கேவலார் நகரில் நுண்கலைவித்தகி திருமதி.கலைவாணி ஏகானந்தராயா அவர்களின் கிறீபீலட் நாகபூசணி பாமாலை என்ற ஒலி-ஒளி இறுவெட்டு கேவலார் நகரில் சிறப்பான முறையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

கிறீபிலட் நாகபூசணி அம்மனின் பிரதம குரு பூசை செய்து இவ்விழாவை ஆரம்பித்த வைத்தார்.

திருமதி.கலைவாணி ஏகானந்தராயா அவர்களினால் இயற்றப்பட்டு அவராலேயே இசையமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட இவ்விறுவட்டு விழாவினை ஐரோப்பிய தமிழ் வானொலியின் அதிபரும் அகரம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.த.இரவீந்திரன் நெறிப்படுத்தி தொகுத்து வழங்கியிருந்தார்.

வரவேற்புரையை திரு.திருமதி. ஏகானந்தராயா கலைவாணி அவர்களின் புதல்வன் வழங்கினார்.

லண்டனிலிருந்து வருகை தந்திருந்த மனிதநேயச் செயலபாட்டளரும் பொறியிலாளருமாகிய திரு .சர்வேசுவரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இறுவெட்டை வௌயீடு செய்ய டோட்முண்ட் சுவீற் சில்லி உணவகத்தின் உரிமையாளர் முதல் இறுவெட்டை பெற்றுக் கொண்டார்.

தீரு.ஏகானந்தராயா அவரகளினால் அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டதுடன் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினைச் சேர்ந்த திரு.புத்திசிகாமணி அவர்களால் ஆய்வுரையும் மேற்படி சங்கத்தின் தலைவரும் மண் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.வ.சவராசா தலைமை உரை நிகழ;த்தினார்.

திருமதி.கீதா பரமானந்தம் திரு.கவிமணி குகதாசன் திரு.அம்பலவன் புவனேந்திரன் திரு.ஏலையா க.முருகதாசன் திருமதி.நகுலா சிவநாதன் திருமதி.கலைவாணி ஏகானந்தராயாஅவர்களின் சகோதரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திருமதி.ஏ.கலைவாணி அவர்களின் ஏற்புரையுடனும் தம்பதிகளின; இளைய புதல்வியின் நன்றியுரையுடனும் விழா இனிது நிறைவு பெற்றது