Breaking News

‘வெள்ளைப் பூவே’ காணொளிப்பாடல்

ADK SRIRASCOL, TEEJAY ஆகியோரின் கூட்டு முயற்சியில் வெளியாகியிருக்கிறது, ‘வெள்ளைப் பூவே’ காணொளிப்பாடல்.

பாடலின் மிகப்பெரிய பலம், ரப் இசை. ஆரம்பத்தில் மென்மையாக பயணிக்கும் பாடல் இதனாலேயே வேகமெடுக்கிறது. பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து ரசிக்கவைக்கிறது.

அலட்டல் இல்லாத காட்சியமைப்பு, பின்னணி இசை, பாடகர்கள் என அனைத்தும் நிறைவாகவே உள்ளது. அனைவரும் தங்கள் பங்களிப்பை நிறைவாகவே தந்துள்ளார்கள்.

காதல் ரசம் சொட்டும் வரிகள் இனிமை. ஆனால், அந்த இனிமையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளமுடியாதபடி உச்சரிப்புப் பிழை தடுத்துவிடுகிறது.

இதை தவிர்த்துப் பார்த்துப் பார்த்தால், ‘வெள்ளைப் பூவே’ ஒரு மென்மையான காதல் சின்னம்.

Merken

leave a reply