Breaking News

***இன்பக் காதல் ***கவிதை காதல்நேசன்

 

இதயங்கள் இடம் மாறி சேரும்
……இனிய காதலே இன்பக் காதல்.
ஜாதகம் பார்த்து மட்டுமல்ல,
…..ஜாதியும் பார்த்து சேர்க்கும் காதல்
பாதகத்தில் வந்து முடிவதாகவே
……பலர் கதைகளும் பேசுகின்றன .
ஆதலால் காதல் கொள்வீர்கள் என்
……அன்பர்களே என அறிவிக்கவில்லை .
போதனை செய்ய நான் ஒன்றும்
…..போதனைக் காதலன் அல்ல ,
மதவேறு பாடுகள் ஒருபுறம் இருக்க,
…….மனவேறு பாடுகள் மறுபுறமிருக்க,
சதையைக்கண்டதும் சடுதியாய் வரும்
……சாமான்ய காதல் கதைகளே இன்று
விதவிதமாய் விளைந்துகிடக்கிறது இந்த
…..விந்தையான விரைவு உலகத்திலே .
மாதம் ஒரு காதல் ,வருடம் ஒரு
…..மணம் புரியும் மட்டமான காதலும்
பாதம் தொட்டு பரிந்து கேட்டு
…..பரிசாய்ப்பெறும் காதலும்,காதலல்ல,
வாதம் செய்து தம் காதலில் நின்று
….வாழ்ந்து காட்டுவதே வெற்றிக்காதல்
இதயங்கள் இடம் மாறி சேரும்
……இனிய காதலே இன்பக் காதல்
ஆக்கம்  காதல்நேசன்

leave a reply