Breaking News

இலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத வரணியூரான்

இலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத ஒரு பெயர்.. வரணியூரான்.. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..60 பதுகளில் இருந்து 83 வரை .. பின்னரும் சிறிது காலம்…95 வரை…நாடகமே அவர் உயிருக்கு உலை வைத்தது…ஒரு நடிகன் தன குரலால் உயிர் இழந்தான்.முதல தடவை ,, அதுவும் எமது நாட்டில் தான்…சரி வருவோம் அவர் பற்றி தெரியாத கலைஞர்களுக்காக ….
இந்த மாபெரும் கலைஞனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பன்.. திரு..கே,கே,மதிவதனன்…கவிஞன் ..நடிகன் நாடக எழுத்தாளன்….திரு.கணேசபிள்ளை அவர்கள் கொழும்பில் யாழ்.கலை.அரங்கம் என்ற பெயரில் ஒரு மன்றத்தை நடத்தி .. மிக சிறந்த நாடகங்களை எழுதி இயக்கி.. வானொலி நாடகங்கள் எழுதி இயக்கி யாழ் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தார்.. அப்போது அவருக்கு ஒரு நடிகர் தேவை.. இதை மதிவதனிடம் சொல்லி இருக்கிறார்..சில மாதங்களுக்கு முன்னர் தான் நான் திருகோணமலையில் இருந்து மாற்றலாகி கொழும்பு வந்த நேரம்… மதிவதனன் என்னை நன்கு அறிவார்.. நான் சொந்தமாக ஒரு மன்றம் அமைத்து நாடகங்கள் மேடையேற்றி..மற்றவர்கள் கேட்க்கும்போதும் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் நடித்தும் கொண்டிருந்தவன்,, பின்னர் எனது மன்றத்தை குலைத்து விட்டு மதிவதனனின் நாமகள் நாடக மன்றத்தில் சிறிது காலம்…அப்போது தான் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்..திரு கணேசபிள்ளை அவர்கள் என்னை போக்குவரத்தில் கண்டும் உள்ளார்..இது 1969 ம் ஆண்டு..எனது அப்போதைய தோற்றம் ஒரு திமிர் பிடித்தவன் அவர் கண்ணில் பட்டுள்ளது….அதேநேரம் நான் ஒரு சினிமா நடிகனும் கூட..என்னிடம் சிறு திமிரும் இருக்கத்தான் செய்தது…எனது வீட்டுக்கு வந்தனர்..நன்றாக பேசினார்..சிறுது காலத்துக்கு முன்னர் தான் எனது நண்பன் ராஜகோபால் அவரிடம் இருந்து பிரிந்தார்…வந்தவர் சும்மா இருக்காமல் ஒரு நடிகன் வேணும் அது ராஜகோபால் மாதிரி பெரிய நடிகர் தேவை இல்லை என…வந்தது வில்லங்கம்.. தேநீர் போட சென்ற எனது மனைவி என்னை அடுக்களைக்கு அழைத்தார்…. கேட்டார் அது சரி நீங்க அவர் நாடகத்தில் நடிக்க போகிறீரா.. அவர் பெரிய நடிகர் வேண்டாம் என்கிறார் என..நான் சொன்னேன் எனக்கு இங்கு அறிமுகம் வேண்டும் நான் நடிக்கிறேன் என,,, உடனே சொன்னா போறது சரி அவர் சொல்வது மாதிரி எண்டால் நான் இனி சாப்பாடு போட மாட்டேன் என…ஒத்திகைக்கு சென்றேன்… நாடகம்… கே.கே.மதிவதனன். எழுதிய ..பித்தலாட்டம்.. எனக்கு ஜோடியாக ..பிரியா ஜெயந்தி ..நான் வரும் ஒவொரு காட்சியும் ரசிகர்கள் ஆரவாரம்…முன் ஆசனத்தில் இருந்த எனது மனைவியும் ரசித்தாள்,,, அன்று தொடங்கிய எமது நடப்பு..சகோதர மனப்பான்மை அவர் இறக்கும் வரை மாறவில்லை எம்மிடம்…அவர் எழுதும் போதும் மிக முக்கிய கதாபாத்திரங்களையே எனக்காக எழுதுவார்.. கைராசியாக முதல் காட்சியில் நான் இப்படி..சதுரங்கம்..கருப்பும் சிவப்பும்.. ஸ்புட்னிக் சுருட்டு ..புளுகர் பொன்னையா..சண்டியன் சின்னதம்பி ..நம்பிக்கை..ஆசை மச்சான்.அசட்டு மாப்பிள்ளை என…மிகுதி நாளை

leave a reply