Breaking News

இலங்கையில் தமிழ் நாடகம்….2 பக்கம்..

தமிழ் நாடகங்கள் ..அ.ந,கந்தசாமியின் மத மாற்றம்..கே.எம்.வாசகரின் புரோக்கர் கந்தையா ..சி.சண்முகத்தின் ஸ்புட்னிக் சுருட்டை தொடர்ந்து ….நாடக உலகை..கலைஞர்களை,,ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த நாடகம்….புளுகர் பொன்னையா…..
—————————————————————
புளுகர் பொன்னையா…பெயரை வானொலியில் பத்திரிகைகளில் கேட்டால் பார்த்தல் முதல் வரும் பெயர் வேலணை வீரசிங்கம்….Brownsan Industries அதிபர் coffee..fismax ..பின்னர் வரணியூரான் கலைதென்றல்.எஸ் எஸ்,கணேசபிள்ளை தான் ..திரு வேலணை வீரசிங்கம் ..துணிவான நிர்வாக திறமை உள்ள ஒரு சிறு கைத்தொழில் அதிபர்..திராவிட கழக கொள்கை பற்றுள்ளவர்… கொல்லாமை கடைப்பிடிப்பவர் எந்த இறைச்சி வகையும் உண்ணாதவர்…இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாதவர்…பல கஷ்டமான கலைஞர்களுக்கு மாதா மாதம் தவறாமல் உதவி செய்தவர்..எங்களின் அன்புக்கு பாத்திரமான எனதன்பு சகோதரர்..இன்றும் ஸ்ரீலங்கா சென்றால் சந்திப்பேன் ..இவர்தான் வானொலியில் முதன் முதலாக வர்த்தக சேவையில் தொடர் நாடகமாக தயாரித்தார். புளுகர் பொன்னையாவை .மக்கள் மனதை கொள்ளை கொண்ட இந்த வானொலி நாடகத்தை…பிரபல நாடக எழுத்தாளர்..சீ.சண்முகம் எழுதினார்…இவர் வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகத்தின் கணவர்.. சிறு கைத்தொழில் அமைச்சில் தட்டச்சு எழுத்து வினைஜர் ஆக பணி புரிந்தார்..எத்தனையோ எழுத்தாளர்களை கண்டுள்ளேன் ..இவர் போல் ஒரு எழுத்தாளனை வாழ் நாளில் கண்டதே இல்லை…அவர் ஆபீஸ் கோட்டையில்.. சில வேளைகளில் நானும் சிலவேளை அந்த வழியால் சென்றால் சென்று பேசுவேன்…வாயில் சிகரெட்…வந்தவரோடு பேசி கொண்டே நாடகத்தை டைப் செய்வார்.. கதா பாத்திரம்.. பேசும் வசனம்.. எல்லாமே… இந்த கிழமை வருவாயா..வாறதெண்டால் சொல் எழுதுறன் என்று டைப் செய்து கொண்டே இருப்பார்….இவர் தான் புளுகர் பொன்னையா வானொலில் நாடக எழுத்தாளர்…வரணியூரான்,,ராஜேஸ்வரி சண்முகம்..கே.எஸ்.பாலச்சந்திரன் நான்..எம்.கே.ராகுலன்..வசந்தி சண்முகம் நடித்த இந்த நாடகம் ஐம்பத்திரண்டு வாரங்கள் ஒளிபரப்பாகியது….நாடகம் ஊரெல்லாம் அதே பேச்சு…நாடகத்தை மேடை நாடகமாக ஒரு விழாவாக யாழ முற்றவெளியில் இலவசமாக காண்பிக்க நினைத்தார்…திரு வேலணை வீரசிங்கம் அவர்கள்…. நாம் சொன்னோம் இது முதன் முதலாக ஒரு பரீட்சார்த்தம் செய்வோம்..ஒரு வானொலி நாடகத்தை மேடை நாடகமாக்குவோம் என..விருப்பம் இன்றி சம்மதம் சொன்னார்.,,திரு,சண்முகம் சில பிரச்சனைகளால் மேடைக்கு எழுத மறுத்து விட்டார்…பின்னர்…நான்..கே.எஸ்.பாலச்சந்திரன்..கணேஷ் அண்ணா மூவரும் இருந்து.. என்னென காட்சிகளை இணைக்கலாம்.. எப்படி தொடங்கி எப்படி முடிப்பது என்று…. நாடக பிரதி தயார்..புளுகர் பொன்னையா வாக வரணியூரான் …கந்தப்புவாக நான்..தம்பையாவாக கே,எஸ், பாலச்சந்திரன்..பொன்னம்மாவாக ..சந்திரபிரபா மாதவன்..சுந்தரமாக எம்.கே.ராகுலன் ..மேடையேறும் நாளும் குறிக்கப்பட்டது…முதன் முதலாக நாடகத்திற்கு Box plan.. அறிமுகம்… விருபிய இடத்தில இருந்து நாடகம் பார்க்க முன் பதிவு…..1971 டிசம்பர் மாதம்..7 அல்லது பதின் நான்கு என நினைக்கிறேன்..எனது கடைசி மகளின் பிறப்பு நாட்கள் நெருங்கிய நிலை.. யாழில் மனைவி மக்கள்…கடிதம் தான்..போன் இல்லை..வாழ்த்து கடிதம்.. எங்களை பற்றி யோசிக்க வேண்டாம் நாடகத்தில் கவனம் செலுத்தி சந்தோசமாக முடிந்ததும் வாரும் என. வெள்ளவத்தை சரஸ்வதி மண்டபம்…ஒரு திரைப்படதிர்க்கில்லாத விளம்பரம்..காட்சி படங்கள் இப்படி..750 ஆசனங்களை கொண்ட அந்த மண்டபம் ஆறு மணிக்கு முன்னரே நிறைந்து விட்டது.. ரசிகர்கள் அட்டகாசம் காட்சி படங்கள் உடைத்தெறியப்பட்டு ..நின்றாவது பார்க்கிறோம் என..கூக்குரலிட்டனர்… பின்னர் நின்று பார்பதற்கும் ஒரு நூறு பேர்வரை டிக்கட் கொடுக்கப்பட்டு மீண்டும் அடக்க முடியாமல்..மண்டப நிர்வாகிகளுடன் பேசி அடுத்த வாரம் மேடைஏற்றுவதாக வாக்களித்து நாடகம் நடை பெற்றது…. நாங்களே வியந்தோம் .. என்ன ஆரவாரம்..சிரிப்பொலி… ஒரு பேராசைக்காரன் பெண் பித்தனாக நான்… எனக்கு திருமணம் செய்து தருவதாக சொல்லி… தம்பையா பாலச்சந்திரனுக்கு பெண் வேசமிட்டு… பெண் காட்டும் படலம் … பெண்ணை பார்த்து நான் சிரிக்கும் குரல்…மண்டபமே ஆடியது… எல்லோருக்கும் மகிழ்ச்சி… இது நாடக உலகில் ஒரு சகாப்தம்… மீண்டும் நாளை //

leave a reply