Breaking News

ஆயிரம் கவிதைகளை தொகுப்பாக்கிய ஆசான் யோ. புரட்சி வாழ்க..

 

j-p

கவிதைத் தொகுப்பால் கின்னஸ் சாதனை படைக்கும் முதல் தமிழன்..

தாயகம் வன்னிபுனம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர், வடக்கு மாகாண சபையின் கவிஞர் விருது பெற்றவர் முன்னாள் போராளியான யோ. புரட்சி நாளை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு புதிய வரலாறை எழுதப் போகிறார்.

 

அவரால் தொகுக்கப்பட்ட 1000 யிரம் கவிஞர்களின் கவிதை நூல் நாளை வெளியீடு செய்து வைக்கப்பட இருக்கிறது, இந்த நிகழ்வு நாளை நேரடி ஒளிபரப்பாக வருமென்கிறார்கள் ரியூப்தமிழ் நிறுவனத்தினர்.

நாளை வீரசிங்கம் மண்டபமே பெருவிழா பூணுகிறது, வரவேற்பு அணி வகுப்புக்கள், தமிழகம் உட்பட பல நாடுகளின் பிரபலங்கள் பங்கேற்கும் சிறப்புக்கள் என்று போருக்குப் பின்னர் கவிதைக்காக பெருவிழா கொள்கிறது யாழ். மண்.

இது வெற்றி..
இது மகத்துவம்..
இது மாபெரும் செயல்..
இது தமிழனுக்கு மீண்டும் ஒரு தலை நிமிர்வு..
இது கம்பன் இளங்கோ பாரதி வரிசையில் ஓர் ஈழத்தமிழனும் இடம் பிடிக்கும் இனிய திருநாள்.
வானத்தில் தேவர்கள் பூமாரி பொழிவது உண்மையானால் நாளை வானத்தில் இருந்து தமிழ் பெரும் புலவர்கள் எல்லாம் யாழ் மண்ணில் மலர்மாரி பொழிய வேண்டிய தினமாகும்.

அன்றொரு யாழ்பாடிக்குப் பின்னர் நடக்கும் ஒரு கலைத்திருவிழா.. தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பின்னதாக மீண்டும் விழாக்கோலம் போடுகிறது வீரசிங்கம் மண்டபம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை மகாகவி தோன்றுவான் என்பது மரபு.. ஆனால் ஆயிரம் ஆண்டுகள் போராடினாலும் ஆயிரம் கவிஞர்களை இணைத்த மலரொனறை உருவாக்குவது இலகுவான காரியமல்ல.

அதை நம் தாயக மண்ணில் வாழும் இளம் கவிஞர், செல்லமுத்து பதிப்பக உரிமையாளர் யோ. புரட்சி நிஜமாகவே சாதித்துவிட்டார்.

புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த பைந்தமிழே உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்.. பாடல் ஒலி வானச்சுவரில் ஓங்கிக் கேட்கிறது.

lys-cut-1

ஆயிரம் மலர்களே மலருங்கள் என்றான் மா ஓ சே துங் ஆனால் ஆயிரமா இல்லை ஆயிரமும் தாண்டி அப்பாலும் சென்றுவிட்டது அவர் கனவு..

இன்று இந்தக் கவிஞனை உலகம் பார்க்கிறது..
கின்னஸ் ஏடுகள் அவனுக்காக புதிதாகத் திறக்கின்றன..

இது சாதனை..!
இது சரித்திரம்..!
ஏனென்றால்..!

எண்ணெயையும் தண்ணீரையும் ஒன்றாகக் கலக்கிவிடலாம் ஆனால் இரண்டு கவிஞர்களை இணைப்பது கடினமோ கடினம் என்பார்கள், அப்படியிருக்க ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிஞர்களை இணைத்து இன்று ஆயிரத்தில் ஒருவனாக அவர் உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

தான் எழுதிய கவிதைகளை தொகுப்பாக்கிய கவிஞர்கள் உலகில் ஏராளம் உண்டு, மற்றக்கவிஞர்களை இணைத்து தொகுப்பாக்கிய முயற்சிகளும் உண்டு ஆனால் ஆயிரத்தைத் தாண்டி ஒரு முயற்சியை செய்திருப்பது எட்டித்தொடப்படாத தமிழ் பெரும் சாதனையாகும்.

போரினால் எரிந்த ஈழம் படைப்புலகில் மகத்தான சாதனை படைக்கும் என்றார்கள், கவிதைகளால் அது சிகரம் தொடும் என்றார்கள்..

இதோ தொட்டுவிட்டார் யோ. புரட்சி !

உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு இடைவிடாது அரும் பெரும் பாடுபட்டு உண்ணாது, உறங்காது, மனம் சோர்ந்து போகாது, கனவை மெய்யாக்க காத்திருந்து அதுவும் வாழ்வுடன் போராடி, பட்டினி கிடந்து பசியால் வாடி போராடி, சிறைக்குள் கிடந்து வெளிவந்து வான் வெளியில் பூத்த விடிவெள்ளியே நம் யோ. புரட்சி.

எழுதினால்தான் அது கவிதையா ஆயிரம் கவிஞர்களை கட்டினாலும் அந்த முயற்சி கவிதைதானே..

பெயருக்கு ஏற்ப அவர் செய்தார் கவிப்புரட்சி..

அணு குண்டு ஒரு முறைதான் வெடிக்கும் ஆனால் புத்தகம் திறக்கத் திறக்க வெடிக்கும் என்றான் ஜெயகாந்தன், அதுபோல ஆயிரத்திற்கு மேற்பட்ட அணு குண்டுகளை ஒன்றாகக் கட்டி அழகுபட தொகுத்து அரங்கப்படுத்தியிருக்கிறார்.

lys.5

இந்தக் கவிதை நூல் எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டும்..

இதில்லாத ஈழத் தமிழ் வீடு ஏன் இருக்க வேண்டும் என்று கேட்கிறேன்..

திட்டம், செயற்பாடு, ஏற்றமிகு எண்ணம் அதன் வழி களைப்பற்ற நடை, முகநூலை சரிவர பயன்படுத்திய முத்தான முயற்சி என்று அவர் சாதனை வழிகளை சொல்லிக் கொண்டே போகலாம்..

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..

வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் வையுங்கள் என்கிறார்கள், தேவையில்லை இதோ நூல் நிலையத்தையே உங்களிடம் தருகிறேன் என்று தருகிறார்.

வாங்குவோம்.. வணங்குவோம்..
இன்று முதல் இவனே
நம் கவிஞனென முழங்குவோம்..!!

நம்மால் முடியாது..!
எல்லாமே அழிந்துவிட்டது..!!
இனி தமிழன் தோற்றுவிட்டான்..!!!

என்று தோல்விக் குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் பதில் கொடுக்க ஆயிரம் கவிஞர்கள் இணைந்து வருகிறார்கள்..

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் அழியாது அழியாது நம் தமிழ்..!!!

lys-1

அதோ விடிகிறது யாழ் மண்ணின் கீழ் வானம்..
ஆயிரம் குதிரைகள் பூட்டிய தங்கமயமாக கவிதைத் தேரில் கதிரவனாக வருகிறான்..
யோ. புரட்சி..
ஆயிரம் மலர்கள் காலைச் சூரியனை கண்டு கண் விழித்து மலர்கின்றன..

இயங்காது கிடந்த தமிழ் இலக்கிய வரலாறு இப்போது தன் செங்கம்பளத்தை தூசு தட்டி உருட்டி விடுகிறது..

வாழ்க தமிழ் !
நானை தமிழ் ஆயிரம் கவிஞர்கள் நூலை சுமந்து ஐம்பெருங் காப்பியங்களுடன் ஆறாவது அணி கலனையும் பூட்டி அழகு பெறுகிறாள்.

எல்லாக் கவிஞர்களின் வெளியீட்டு விழாக்களிலும் நீ நின்றாய்.. இன்று எல்லோரும் நின்றார்கள் உன் விழாவில்..

leave a reply