Breaking News

ஆண்களே இது உங்கள் தினம்

உலகப் பெண்களின்
உரிமையில் என் நீயும்
உன் மூக்கை நுழைக்கிறாய்,
உன் வீட்டுப் பெண்களின்
உள்ளத்தை புரிந்து கொள்,
உனக்காய் வாழும்
உன்னவளுக்காய் நீயும்
உண்மையாய் இரு,
உதிரத்தை நீகொடுக்க
உயிராய் பெற்றெடுத்து
உன்சந்ததி தந்தவளுக்காய்
உயிரையும் கொடுத்திடு,
உயிர் கொடுத்து
உன்னைப் பெற்றவளை
உயிராய் மதித்திடு,
உடன் பிறந்தவளையும்
உனக்குப் பிறந்தவளையும்
உன் மகளாய் காத்திடு,
உலக ஆண்கள் இந்த
உண்மையை நன்கு
உணர்ந்து கொண்டால்
உலகப் பெண்கள் தினம்
உருவாகியிருக்காது ,

பெண் நேசன்

leave a reply