Breaking News

ஒருத்தியை பார்த்தவரின் சிறப்பு பதிவு

„அரசி“: எனும் „ஒருத்தி“ யை உரசிப் பார்த்தோம்

நம்பி வாங்கி எம் விரல்களில் அணிந்து கொள்ளலாம்….
———————————————————————————–.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு யோர்க் சினிமாவில் „ஒருத்தி“யை பார்ப்பதற்காய் வாகனத்தில் விரைந்து கொண்ருந்தோம்.
ஆரம்பித்திலிருந்து அமர்ந்திருந்து பார்க்க வேண்டும் என்ற துடிப்பு எமக்கிருந்தது. ஆனால் நீண்ட விடுமுறையை நோக்கிய வார இறுதி என்றபடியால் வீதிகளில் வாகன நெரிசல்.

ஆனாலும் 1.05க்கு திரையரங்கை நெருங்கிவிட்டோம். வாசலில் ஒரே பரபரப்பு. ஒவ்வொருவர் முகத்திலும் மிகுந்த ஆர்வம் „ஒருத்தி“ யைக் காண…
அதற்கு காரணங்கள் பல உண்டு.

படிகளைக் கடந்து படமாளிகைக்கு முன்பாக செல்ல முனைந்தோம். 
அங்கும் நெரிசல் தான்..
தயாரிப்பாளர், இயக்குனர் பி. எஸ் சுதாகரன் வரவேற்றும் கலைஞர்களை அறிமுகம் செய்தும் உரையாற்றிக் கொண்டிருந்தார். 
கனடிய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சர் என்ற அந்தஸ்த்தைக் கொண்ட பாராளுமன்றச் செயலாளர் பதவியை வகித்து தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்தவருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

அனைவரும் ஆர்வத்துடன் திரையரங்குக்குள் புகுந்தோம்.
ஒருத்தியின் கதை எமது தாயக மண்ணிலிருந்து ஆரம்பிக்கின்றது. எம் அனைவரையும் பல ஆண்டுகள் வளர்த்து பல ஆண்டுகள்தாங்கி நின்ற தாய் மண் என்பனால் ரசிகர்கள் மிகவும் அமைதியாக மண்ணின் அழகை ரசித்தார்கள். 
எமது பார்வையும் ரசிப்பும் ஒரு தண்டவாளம் போன்று சீராகச் சென்று கொண்டிருந்தது.

பல இடங்களில் ஒளிப்பதிவாளர் ஜீவன்ராம் எமது மனக்கண்ணில் தெரிந்தார்.

கூடவே அவர் கற்ற தொழில்நுட்பம் கைகொடுத்திருக்க வேண்டும். கதைக்குரிய காட்சிகளோடு தாயகத்தின் அழைகை காட்டுவதற்காக அவரது கெமரா சில இடங்களில் மெதுவாக அசைந்தது…

கனாடவிலிருந்து நடிக நடிகைகளையும் அங்கு அழைத்துச் சென்றிருந்தார்கள் பி. எஸ். சுதாகரனும் ஒளிப்பதிவாளர் ஜீவன்ராமும்

ஒருத்தியின் தந்தையாக வந்த மதிவாசனும் தாய◌ாக மிளிர்ந்த கோதை அமுதனும் எற்கெனவே மேடை அனுபவம் கொண்டவர்கள். கதைக்கேற்ப அவர்கள் இருவரும் நகர்ந்து சென்றார்கள்.

அந்த அழகான ஒருத்தி (எவ்வித முன்அனுபவமும் இல்லாதவர் என்று கேள்வி) திரையில் தோன்றினாள். திரைப் படத்தில் நடிப்பதற்க்குரிய முகம் நளினம் 
நடை சிறுமியாக ஓடியும் பாய்ந்து நண்பர்களோடு விளையாடுவது போன்று நடிப்பது போன்ற காட்சிகள் மிகவும் பொருத்தமாக படமாக்கப்பட்டுள்ளன.

கதாநாயகி அரசி, பூப்பெய்துவதற்கு முன்னாள் அதற்குப் பின்னாள் என்ற இரண்டு கட்டங்களையும் அவள் எவ்வாறு கடக்கின்றாள் என்பதை நன்கு படமாகிக்கியிருந்தார்கள்.

அந்த ஒருத்தி அரசி க்கு ஏதோ நடந்து விட்டது என்று கேள்விப்பட்டு பாடசாலைக்கு மனம் பதை பதைக்க ஓடிய தந்தை மதிவாசனை அங்கு சிரித்து முகத்துடன் வரவேற்ற அவரது பாடசாலை வகுப்பாசிரியை அவரை வரவேற்ற விதமும் பின்னர் “ அரசியை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போய் அ வவின் அம்மாவிடம் இந்த சந்தோசமான செய்தியைச் சொல்லுங்கள்“ என்ற காட்சியும் வசனங்களும் தாய் மண்ணில் ஒரு தாய்மையின் பெருமையையும் ஒரு ஆசிரியைக்குரிய கடமையையும் தெளிவாகக் காட்டியது மனதில் இதமாகப் பதிந்தது

இளம் மாணவி தொடர்பான சில காட்சிகளை அழகாகவும் சினிமாத் தனத்தோடும் காட்டியிருந்தார்கள் பி. எஸ். சுதாகரனும் ஒளிப்பதிவாளர் ஜீவன்ராமும்

படம் நாம் முன்னர் சொன்னது போன்று வேகமாகவும் அமைதியாகவும் நகர்கின்றது.

தொடர்ச்சி நாளை…. படத்தில் நாம் „கிளிக்“ செய்த சில படங்களை இப்போது பாருங்கள்

leave a reply