Breaking News

பீலபெல்ட் தமிழ் மக்களும் தமிழர் கலாச்சார மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல்விழா

பீலபெல்ட் தமிழ் மக்களும் தமிழர் கலாச்சார மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல்விழா கலைமாலையின் சிறு தொகுப்பும் நன்றிகளும்….

ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
எனும் வாசகத்தோடு எமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய எம் தமிழ்மக்களே! உங்கள் எல்லோருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, எமது இந்த பொங்கல் விழாவினைச் சிறப்பிக்க வந்த அனைத்து எம் உறவுகளுக்கும் மிக அமைதியாகவும் ஆர்வத்துடனும் கலைமாலை நிகழ்வினைக் கண்டு களித்து எமக்கு ஆதரவுக் கரங்களைத் தட்டி மகிழ்வூட்டியமைக்காகவும் அனைத்துப் பார்வையாளருக்கும் எமது நன்றிகள்.

நிகழ்விற்காக ஆதரவுக்கரம் நீட்டி ஒத்துழைப்பு நல்கிய வர்த்தகப் பெருமக்கள் பொதுமக்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
இந்த கலைமாலையை அழகுதமிழால் அலங்கரித்து விழாவின் ஆரம்ப நிகழ்வின் மங்கல விளக்கேற்றும் அகவணக்கம் முதலான தொகுப்புக்களையும் தனக்கே உரித்தான கம்பீர நடையடள் „அவைத்தென்றல் „அளவையூர் திரு. வ. திலகேஸ்வரன் ஆரம்ப நிகழ்வினைத் தொகுத்து வழங்கிட தொடர்ந்து அவர்களுடன் இணைந்த அன்பு
அறிவிப்பாளர்கள் சிம்மக் குரலோன் திரு.தம்பிப்பிள்ளை இராஜகுலநாதன் அவர்களுக்கும் மற்றம் சிறுவயதிலேயே ஆற்றலும் திறமையும் கொண்டு ஒரு நிகழ்வினைத் தொகுத்து வழங்கும் அளவிற்கு ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற தம்பி செல்வன் டனோ[ன் சிவநேசன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.

எம் அழைப்பை ஏற்று வந்து இவ்விழாவினைச் சிறப்பிக்க பார்வையாளராகவும் உதவிக்கரம் நல்கியவர்களாகவும் விளங்கி விழாவினைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்.

இவ்விழாவினை மங்கள வாத்திய இசையுடன் ஆரம்பித்து வைத்த வாத்திய இசைக் கலைஞர்கள் ஆகிய தவில் வித்துவான் திரு.கணேசன் பத்மசோதி மற்றும் நாதஸ்வர வித்துவான் திரு.ச.பரந்தாவன் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.

நாம் கேட்ட போதெல்லாம் எமது பொங்கல் விழாக் கலை மாலைக்கு வருக சபையோரே என்ற பாடலுடன் வரவேற்பு நடன நிகழ்வுடன் தனி நடனத்தையும் ஒவ்வொரு முறையும் தந்து சிறப்பிக்கின்ற நாட்டிய “கலாஜோதி“ “நாட்டிய தாரகை“ செல்வி அனாமிக்கா இரத்தினசிங்கம் அவர்களுக்கும் நன்றி.
பல மாணவர்களை இணைத்து வண்ணமயில் என்ற தலைப்பில் மற்றும் நீதானே உயிருக்கெல்லாம் முதலானவன்-கன்னியரே கூடுங்கடி என்ற நடனங்களையும் சிறப்பாகவும் தந்து உதவிய பார்வதி நடனாலய மாணவர்களின் ஆசிரியை “நாட்டிய கலாஜோதி“ செல்வி சமீனா போல் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றிகள்.

உயிரின் தமிழே என்ற பாடலுக்கும் முதல்வனே என்ற சிறந்த நடனத்தை தந்த மாணவர்களின் ஆசிரியை நாட்டிய கலாஜோதி செல்வி.ஓவியா ரபேந்திரன் செல்வி. காவியா ரபேந்திரன் அவர்களுக்கும் நண்பிகளாக நடன் இணைந்து வழங்கிய செல்விகள் ஜெனிபர் மற்றும் யஸ்மின் ஜேம்ஸ் செல்வன் கவின் ஆகியோருக்கும் நன்றிகள்.

பொங்கல் வருகுது குழு என்றும் மற்றைய நடனங்களை நெறியாள்கை செய்து தந்து எம்மையெல்லாம் மகிழ்விக்கும் கலைக்கண் நடனக்குழு
ஆசிரியை திருமதி.கொன்சி ஆஞ்சலேஸ் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் எமது நன்றி.

முன்ஸ்ரர் நகரில் இருந்து வந்து கடந்த 5 வருடங்களாக எம்மோடு எவ;வித எதிர்பார்ப்பும் இல்லாது தம் வீணை இசையால் எம்மை மகிழ்வித்த திருமதி.மீரா நித்தியானந்தன் அவர்களின் மாணவி செல்வி திலக்சனா சுரேந்திரன் அவர்களுக்கு பக்கவாத்தியமாக மிருதங்க இசையை வழங்கிய செல்வன் சுரேந்திரன் தனுஸ் அவர்களுக்கும் கடம் வாத்தியத்தை இசைத்த நண்பன் திரு.பொன்னம்பலம் சுரேந்திரன் எமது நன்றிகள்.

கேட்டவுடன் மிகக் கணிசமான செலவுடன் கூடிய இசைக்கலைஞர்களை ஆனாலும் மிகத்தொலை தூரத்தில் இருந்த வரவழைத்து மனநிறைவான பாடல்களையும் இசைதனை வழங்கிய கர்நாடக இசைத் திறமைகளாலும் தாயகப் பாடல்களாலும் சினிமாப் பாடல்களாலும் கந்தர்வ குரலால் பலமேடைகள் முதல் அரங்கேற்றம் வரை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் மதுரக்குரலோன் S, கண்ணன் தலைமையில் பாடலிசைத்த கலைஞர்கள் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நகைச்சுவைகளாலும் தாயகப் பாடல்களாலும் மொழிபெயர்ப்பாளர் என்ற தலைப்போடு சிறிய உரையாடல் நிகழ்வினைத் தந்து நமது மனங்கவரச் செய்த நண்பர் திரு.இராயப்பு விஜயன் அவர்களது நிகழ்வு தாமாக முன்வந்து வழங்கியமைக்காக எமது நன்றிகள்.
நம் நாட்டின் வாழும் அல்லறும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கை கொடுத்துக் கொண்டிருக்கும் உதயம் வாழ்வாதார நிறுவன உரிமையாளர் திரு.டயஸ் மற்றும் குழுவினர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.

தனது புதல்வனுடன் மனமகிழ்வோடு திறம்பட விடியோ ஒளிப்பதிவு தன்னை செய்து எமக்கு உதவும் விது வீடியோ மண்டப அலங்கார சேவை நிறுவன திரு.இராமு ஜெயக்குமார் அவர்களுக்கும் எமது நன்றி.

ஒவ்வொரு வருடமும் குடும்பமாக வந்து தரமான புகைப்படச் சேவையை செய்து கொண்டிருக்கும் நந்தா போட்டோ திரு.பாலகிருஷ்ணன் நந்தபாலன் அவர்களுக்கும் பாரியாருக்கும் எமது நன்றிகள்.

மற்றும் மண்டபம் ஒழுங்கை மேற்கொண்டு எமக்கு உதவிய திரு.சிவசோதி வரதராஜா அவர்களுக்கும் எமது நன்றி.

இவ்விழாவின் ஒலியினை உங்கள் காதுகளுக்கு கொண்டு வந்து சேர்த்த Bochum நகர் திரு.லோகநாதன் அவர்களது ஒலியமைப்பு எமக்கு மகிழ்வைத் தந்தது அவர்களுக்கும் எமது நன்றி.

மற்றும் விழா இனிது நடைபெற ஒத்துழைப்பும் ஆக்கமும் ஊக்கமும் தந்த உதவி கடைசி வரை நின்று உதவிடும் அனைத்து நண்பர்கள் குறிப்பாக திரு.கனகசபை சிறீகரன் திரு.ரவி போன்ற இன்னும் பெயர் குறிப்பிடாத அன்பர்கள் நண்பிகள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உதவி அதிஷ்டலாபச் சீட்டு விற்பனை உதவியில் இருந்து பலவகையினில் உதவி செய்தவர்கள்
திருமதி.டிஷாந்தினி ஜெம்ஸ்
திருமதி.அஞ்சலி மோகன்
திருமதி. தீபராணி சுதாகரன்
திருமதி.ஷாமா பத்மநாதன் (தவம்)
திருமதி.றயானா கிருபநாதன்
திருமதி.ரூபிணி ஞானேஸ்வரன்
திருமதி.சுதாசினி ஜெயசோதி
திருமதி.வாணி செல்வச்சந்திரன்
திருமதி.வசந்தி ரவி
திருமதி.ஜெயரூபி நகுலேஸ்வரன்
திருமதி.குகபாஸ்கரன் ஜெயரஞ்சனா
திருமதி.ஜெயந்தி ஸ்ரீகந்தராஜா
திருமதி.கமலவதனி இலட்சுமணராஜா ஆகியோருக்கும் தொடர்ந்தும் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்றும்ஆதரவுக் கரங்களும் தொடர்ந்த நல்க வேண்டும் என்று கூறிக்கொண்டு ஏதாவது கலை நிகழ்வில் ஏற்பட்ட தவறுகள், மற்றும் பெயர்கள் குறிப்பிடத் தவறின் எமது தவறுகளை மன்னித்து எமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு வேண்டி ஒன்று பட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நிங்கில் அனைவருக்கும் தாழ்வு என்றும் நாம் தொடர்ந்து இப்பொங்கல்விழாக் கலைமாலையை சிறப்பிப்போமாக……………
விழா ஏற்பாட்டு குழுவினர்கள்.

leave a reply