Breaking News

ஓராயிரம் கற்பனைகள்

ஒரு குவளை தேனீர் உட்செல்லும் போதேஓராயிரம் கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கும்.ஓசைகள் காதில் விழும், இருந்தும் அவைமறந்து ஊரோடு ஒன்றி உறவாடிமகிழும்.சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லைசுப்ரமணியனை மிஞ்சிய கடவுளில்லைஎன்பார்கள்இஞ்சிக்கு தோல் விடமாம்கடுக்காய்க்கு கொட்டை விடமாம்படித்த நினைவுகள் வரவுகளாகும்.சுக்கினை எடுத்து சுண்ணாம்பு தடவிசுடுநெருப்பின் தீயில் மேலாக கருக்கிசுரண்டி சுத்தமாக்கிய பின் பொடியாக்கி பயன்படுத்த வேண்டுமாம். ம்.. கையில் சுக்கு தேனீர் தான்.பாட்டி வைத்தியத்தை இன்று போட்டி போட்டு படிக்கின்றோம்.வருடம் தவறாமல் சுக பேதி மருந்தும் பூச்சி மருந்தும், மூலிகை குளியலும்,சீனிக்குப் பதில் பனங்கருப்பட்டியும், சர்க்கரையும்.கன்று குடித்து வயிறு நிறைந்து நுரை தட்டியபின் கறக்கின்ற பாலும்,கடும் மழையில் நனைந்துவிட்டால்கண்டிப்போடு தலை துவட்டிய கைகளும், கதிர்நெல் மூட்டைகள் அடுக்கிய அறையும்,சுடு நெல் பரவி தோல் நீக்கிய சுற்றமும்,பாவை நோன்பிருந்து பாடிய பாட்டும்,தேவை அறிந்தளந்து சேமித்த களஞ்சியமும்..அடடா நீண்டு செல்லுமே நம் வாழ்வுமுறை.வேலியில் பாவட்டையும் நொச்சியும் நின்றதுதென்னையின் கீழ் சீந்தில் கொடி நின்றதுமூலையில் முடக்கொத்தான் தானே படர்ந்ததுகொய்யா, மாதுளை, வாழை, தூதுவளை,சுண்டங்காய், சுற்றிவர பழமரங்கள் எனஅருகிருந்த போது அருமை புரியாமல் அண்டை நாட்டில் அங்கலாய்க்கும் அவலம்.கொடிய நோயை கண்டதும் தான்அத்தனை அறிகுறியும் அப்படியே அடங்கி எம்முள் இருப்பது போல தோன்றஅங்குமிங்கும் முழிசியடித்துக் கொண்டுசெடியை, கொடியை, பட்டையை, வேரை எனபழைய மரபுகளை பெற பறந்தோடி திரிகிறோம், என்ன பயன்?அருகிருந்தும் அருமை தெரியவில்லை அண்டை நாடு சென்று உணர்ந்தபின்அறுகு கூட அருகில் இல்லை.அம்மாவுக்கு பக்கத்தில் படுக்கஅக்கா தங்கையோடு போட்டியிட்டுதங்கச்சி வென்று விட்டால் அவள்தூங்கும் வரை விழித்திருந்து தட்டாமல் கொட்டாமல் மெதுவா தள்ளிவிட்டுஅப்பாடா என அம்மாவோடு படுத்தாலும்…காலை கண்விழித்து பார்க்கையில்கால் போட்டபடி அவள்தான் அம்மாவோடு.ஒருகை உனக்கு, ஒருகை அவளுக்கு எனஇருகை அணைப்பையும் தந்துவிட்டுஇயேசு நாதர் சிலுவையில் போல்என் அம்மா எப்படி தூங்கினாரோ?பள்ளியில் பாடலோ, ஆடலோ பழகிவிட்டால்பாட்டிக்கு ஒருக்கா பாடிக்காட்டுமாமிக்கு ஒருக்கா ஆடிக்காட்டு எனஅம்மாவின் ஆர்வக் கோளாறால்அவத்தையில் முறைத்தபடி ஆடிப் பாடியதும்வருபவர் போகிறவர்களுக்கெல்லாம்ஆங்கிலத்தில் கவி சொல்லிக் காட்டிகடுப்பாகிய பொழுதுகளெல்லாம் சேர்ந்துகண்ணருகே வந்து கசியும் நீராய் சொன்னதுகெஞ்சினாலும் இனி வர முடியாத அவைஇனிப்பான பொழுதுகளென்று.ஈழத் தமிழராய் நாம் பிறந்ததனாலே இருப்பவையை விட இழந்தவை பலவாழத் துணிந்து வானில் ஏறிப் போனாலும்ஆழம் புரியாமல் காலை விட்டதாகவே பலர்ஆறி அமர்ந்து உணர்ந்து கொண்டாலும்ஆயிரங் காரணங்களால் அங்குமிங்கும் ஆசை அடக்கி அமைதியாக வாழ்கின்றனர்.ஆயுசு முடிய முதல் தான் பிறந்த இடத்தில்ஆசைதீர வாழ வேண்டும் என்று பலர் பேசிய காசைவிட குறைந்த கூலியில்ஏசியை விட குளிரில் சேர்த்த காசை எல்லாம்ஒன்றுசேர்த்து பங்கு போட்டு குடுத்தால்மிஞ்சியது என்னத்த காணும் என ஏங்கிஓயாமல் உழைத்ததால் பாயோடு படுத்துதேயாத கனவோடு உயிர் நோயோடு போவர்.அக்கரைக்கு இக்கரை பச்சை என்றுணர்ந்த பின்யார் யார் என்ன சொன்னாலும்இப்புவியில் உனக்கு கிடைத்த வாய்ப்பே இப்பிறவி.உயிர் இருக்கும் வரை என்றென்றும் இறைவனுக்கு நன்றி சொல்லிஇருக்கும் வாழ்வை இனிதாக்குவாய்உனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்வாய்!!கரிணி

?

189Mullai Mohan, Telakeswaran Vallipuram and 187 others86 Comments

leave a reply