என்னுக்குள்…

என்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள் அடங்காமலே……

புதிய தலைமுறை

என் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம் புரிகிறதா…

வென்று தோற்ற ஆண் விதவை…

கனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித் தூவியவன்.…