Breaking News

வட்டம் விட்டு…!

நீயாகி
நானாகி
நமதாகி
நமக்காகி
வாழ்வது
வாழ்வாகாது.!
ஊராகி
உறவாகி
உயிராகி
வேராகி
விதையாகி
வாழ்ந்தவனே
வாழ்ந்தவானாகி
வாழ்கின்றான்..!
பரந்த வானில்
பட்டம் பறப்பது
போலாகி வா
வெளிகளை
தேடிப் பற
பொதுப்படப்
பறந்து பார்
வாழ்வாகும்..!
வட்டம் விட்டு
வெளியே வா
உனக்கான
உலகம்.
உனக்கான கடன்
ஏராளம். நீ
தாராளம்
கொண்டு செயல்
படு..! உன்
வாழ்வும் பட்டுப்
போகாது..அதுவே
வாழ்வாகும்..!
ஆக்கம் கவிஞர் தயாநிதி

leave a reply