Breaking News

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 26.06.2021 கவிஞர் குமரகுருஅவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஔிபரப்பாகிவருகின்றது

இதில் இன்று கனடாவில: இருந்து கவிஞர் குமரகுரு
இவர் தமிழீழத்தில் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்புப்; பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப்பட்டம் பெற்று ஆசிரியராகக் கடமை புரிந்தவர். அத்துடன் வீரகேசரிப் பத்திரிகையின்
மட்டுநகர்ப் பிராந்திய செய்தியாளராகவும் பலகாலம்
சேவையாற்றியவர்.தமிழ்மண்மீதும் தமிழ்மீதும் மிகுந்த பற்றுடையவர். கனடிய மண்ணில் பல்வேறு சங்கங்களில் பொறுப்பான பதவிகளில் பதவி வகித்துவருபவர். முக்கியமாகப் பொருளாளர் பதவிக்குப் பொருத்தமான நேர்மையான அன்புள்ளம். இவரும் கனடா அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் கற்று முதுமாணிப் பட்டம் பெற்றவர். கனடாத் தொல்காப்பியர் மன்றத்தின் உயர்ச்சியில் அயராது உழைப்பவர். அத்துடன் சுவாமி விபுலானந்தர் கலைமன்றத்தின் முக்கிய அங்கத்தவராகப் பல்லாண்டு பணிபுரிந்துவருபவர். இவரும் பண்டிதர் ம.செ. அலெக்ஸ்சாந்தர், கவிநாயகர்
கந்தவனம் ஆகியோரைக் குருவாகக்கொண்டு யாப்பிலக்கணத்தினை முறையே கற்று பற்பல மேடை நிகழ்ச்சிகள். வானலை. வானொளி நிகழ்ச்சிகளிலும் சூம்வழியாகவும் கவிதை படைத்து வருகின்றார்.
இப்படிப்பட்ட பன்முகக் கலைஞர் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வில் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 26.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்கான நேர்காணல் கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
துணை ஒருங்கிணைப்பு ஊடகவித்கர் இக.கிருஷ்ணமூர்த்தி
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

leave a reply