யேர்மனி நோயிஸ் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற சைவத்தமிழ் கலைவிழா!

யேர்மனி மாநாட்டில் நோயிஸ் நகரத்தில் நடைபெற்ற சைவத்தமிழ் கலைவிழாவும், தேவார பண்ணிசைபோட்டியும் மிகவும் சிறப்பாக அமைந்தது.உண்மையில் பாராட்டவேண்டிய நிகழ்வு சிறப்பு விருந்தினர்களாக லண்டன் மாநகரத்திலிருந்து வருகைதந்த வசந்தகுருக்கள், கொலண்ட் ஜயாமணிகுருக்கள், சுவற்றா ஜெயந்திநாதகுருக்கள், கம்காமாட்சி பாஸ்கரகுருக்கள், கவிமாமணி கி.த.குகதாஸ் அவர்களும் கலந்துகொண்டார்கள். திருமதி.கோகிலன் தம்பதிகள் மற்றும் திருமதி.விஜரட்னம் தம்பதிகளின் தனிமுயற்சியினால் 10வது அகவை தாண்டிய விழாவாக சின்ன சிறு பாலகர்களின் தேவாரஇசை இசை சொல் உச்சரிப்பு  சங்கீத ஆசிரியர்களின் பங்களிப்பு பாராட்டவேண்டிய விடயம். விருந்தினர்களாக அழைத்த அனைவருக்கும் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தார்கள் கி.த.கவிமாமணி. கௌரவத்தை இருதம்பதிகளும் அளித்து கௌரவம் செய்தமை மகிழ்வே.

Merken