பொங்கலோ பொங்கல் !கவிதை ஜெசுதா யோ

இன்றைய நவீன பொங்கல்
அர்த்தம் தெரியாத
அபூர்வபொங்கல்
மின்சார அடுப்பில்
மிக வேகமான பொங்கல்
happy pongal என்ற
வாழ்தோடு தொடங்குகிறது..!

பரிமானங்கள்
பரிமாற்றங்கள்
படித்தமேதைகள்
உதட்டுமுத்தத்தில்
உயர்ச்சியாக கூறும்
நல்வாழ்த்துகள்,..!

கடைகள் எங்கும்
மலிவுவிலையில்
பகட்டாய் தெரியும்
விளம்பர மட்டையும்…!

உழவர் பெயர் சொல்லி
உழைக்கும் வர்க்கம்
மறவர் அவர்களின் துன்பம்
மறந்த முதலாழிகள்…!

பட்டிமன்றங்கள்
கவியரங்குகள்
மேடைகள் தோறு
முழுங்கும்
வாத்தியங்கள்
இவையாவும் உழவர்களுக்கு
நன்மை பகிராதே…!!

ஏர்பிடித்தவன்
ஏங்கியே வாழ்கிறான்
கடன் வாங்கியென்றாலும்
கடவுளுக்கு படைக்கின்றான்
மனம்குளிர …
வாழ்த்தி நிற்கின்றான்…!!

வாழ்வழித்த வள்ளளென
ஏரெடுத்து மண்ணில்
வான் பார்த்து வானத்துக்கடவுளை
தன் கரம்கொண்டு
கைகூப்பி நன்றியென்றும்
பெரும் கடனை தீர்க்க
பொங்கலோ பொங்கல் சொல்லி
வாழ்த்தி வணங்குகிறான்…!!

                                                                                  ஆக்கம் ஜெசுதா யோ