மெட்டுக் கட்டு

கொத்திப் தின்னுதே உன் பார்வை
கொதித்து துள்ளுதே என் வேர்வை
அசந்து போனேன் உன்னால..
அசைவப் பூவே என்னைக் கொல்லாதே
இடையளவில் தூளி கட்டு
இனியவளே தொட்டிலாட
இசையமைத்து மெட்டுக் கட்டு
இறுதிவரை உன்னைத் தொட்டு ஆட..
மொட்டு விட்ட பூவே புன்னகைக்காதே
மொக்காடு போட்டு என்னை நீ நனைக்காதே
பட்டுவுடலை காட்டி என் விழியைக் கொய்யாதே..
பச்ச மனம் புள்ள என்னை பத்த வைக்காதே..
மதயானை போல ஆனதடி என் மனசு
மெருகேற்றி உசுப்புதடி உன் வயசு
மெழுகாக உருகுகிறேனே உனை நினைச்சி
முழுநாளும் நீ கிடைச்சா நான் மகிழ்ச்சி..!!

கவித்தென்றல் ஏரூர்