வலிகளைக் பெற மனமில்லை எனக்கு!

 

மறைந்து பயணிக்கும்
வாழ்க்கையில் தெரிந்து
நடக்கின்றதாம் பல
குற்றங்கள்!

திருமணம் முடித்து
இருவரும் பூசிய
உணர்ச்சிகள் மூலம்
பிறக்கும் குழந்தைகளை
விட
வேசிகள் மூலம்
வீசப்படும் வடுக்களே
அதிகமாய் உருவெடுத்து
விட்டதாம் இன்று!

வியாபார வாழ்க்கையில்
வந்து போவாேர்
எல்லாம் நொந்து
போகும் அளவு
விபச்சார விடுதிகள்
நிறைந்து விட்டது
இன்று!

பஞ்சக் கிளியினைப்
பார்த்துத் திகைத்த
காலம் மறைந்து
பஞ்சக் காலத்தில்
பூத்த மல்லியினைத்
தூக்கி ஓடுகின்றனர்
உயிரூட்டம் உள்ள
மானிடம்!

இவற்றைப் போய்
எங்கு உரைப்போன்!
கரைந்துப் போகும்
நற்பண்புகளைப் பார்க்கும்
போது,நரம்புகள்
எறும்புகளாய் மாறி
கடிக்கின்றது இதயம்
சோர்வடைந்து போவதற்காய்
வாழ்வதற்காய் ஓடும்
ஓட்டங்களைப் பாராது!

பாசமாய்ப் பேசி
பல்லாயிரம் கொடுத்து
பாதாளத்தில் தள்ளிவிடும்
நாகரீக மேதையாக
மாறிவிட்டதடா காலம்!

உரசிப் போன
உணர்வுகள் நடுவில்
இரகசியமாகத் தொலைந்து
போகின்றது உயர்வான
பெண்மைகளின் புனிதமான
கற்புகள்!

வஞ்சகம் நிறைந்த
பூமியில் என்றுதான்
பஞ்சமில்லாது கிடக்குமே
நெஞ்சமல்லாம் சிறந்தவள்
எனப் பாராட்டி
வாழ்பவளைக் காண!

பொத்துவில் அஜ்மல்கான்