Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 யேர்மனி தமிழ் கல்விச்சேவை – ஐரோப்பா ஆதரவில்வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை – டோட்முண்ட் நடத்தும்17ஆவது வருடாந்தத் திருக்குறள் மனனப் போட்டி – 2023 – stsstudio.com

யேர்மனி தமிழ் கல்விச்சேவை – ஐரோப்பா ஆதரவில்வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை – டோட்முண்ட் நடத்தும்17ஆவது வருடாந்தத் திருக்குறள் மனனப் போட்டி – 2023


திருக்குறள்இ மனித வாழ்விற்கு வழிகாட்டும் உலகப் பொதுமறை. தமிழர் வாழ்வின்
இலக்கணம் திருக்குறள். பெரும் சிறப்புவாய்ந்த திருக்குறளை, நம்பிள்ளைகள் அறிந்தும்,
படித்தும் பயனடைய வழிகாட்டும் நோக்கில் நடாத்தப்படும் போட்டியே, திருக்குறள்மனனப் போட்டியாகும். இப்போட்டியில் பிள்ளைகளைப் பங்குகொள்ளச் செய்து, திருக்குறள்வழி வாழவைப்பதற்கும்தமிழ்க் கல்வியில்ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும்பெற்றோர்களும்,
பெரியோர்களும் ஒத்துழைக்க வேண்டுகின்றோம்.
ஒவ்வொரு பிரிவில் பங்குபற்றும் பிள்ளைகளில் கூடிய புள்ளிகளைப் பெறும் மூவருக்கு,
முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்படும்.
பங்குபற்றிய யாவருக்கும ; பதக்கங்கள் வழங்கப்படும்.
போட்டிகள் 2023.11.11ந் திகதி டோட்முண்ட்நகரத்தில் காலை 10.00 மணிக்கு
ஆரம்பமாகி நடைபெறும். இடம் பின்பு அறியத்தரப்படும்.
முடிவுகள் யாவும் அத்தினமே அறிவிக்கப்படட்டு பரிசுகளும், பதக்கங்களும்
வழங்கப்படும்.
விண்ணப்பங்களைப் பூரணப்படுத்தி போட்டிக்கான அனுமதிக் கட்டணத்தையும் சேர்த்து
அனுப்புதல் வேண்டும். (ஒருவருக்கான கட்டணம் 12- ஒயிரோ. குடும்பத்தில் ஒரு
பிள்ளைக்குக் கூடுதலானவர்கள் பங்குபற்றும்போது,முதலாவது விண்ணப்பத்தாரர் தவிர்ந்த
மற்றவர்களுக்கு முறையே 8.- ஒயிரோ)
போட்டிக்கான விபரங்களையும், விதிமுறைகளையும் நன்கு கவனித்து கொள்க.
பிரிவுகளுக்கான வயதுக்கணிப்பைஇ போட்டியின்போது உறுதிப்படுத்த வேண்டும்.
வயதுக்கவனிப்பு மிக முக்கியம். அந்தந்தப் பிரிவுகளுக்குரிய குறட்பாக்களையே மனனம்
செய்தல் வேண்டும்.
விண்ணப்பங்களைப்பூரணப்படுத்தி 2023.10.14ந் திகதிக்கு முன்னம் அனுப்பி
வைத்தல் வேண்டும்.

வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை – டோட்முண்ட்

திருக்குறள் மனனப் போட்டி – 2023

விபரங்கள்:
வயது விடயம் – திருக்குறள்
பாலர்பிரிவு
31.10.2018 – 30.10.2020
4 தொட. 5 வயது வரை.
முதலாம் (1) அதிகாரமான கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்
திலிருந்து முதல் நான்கு குறட்பாக்களை மனனம் செய்து கூறுதல்.
குறளிலக்கம்:- 1 – 2 – 3 – 4
கீழ்ப்பிரிவு
31.10.2016 – 30.10.2018
திகதிக்குள் பிறந்தவர்கள்.
6 தொட. 7 வயது வரை.
எட்டாம் (8) அதிகாரமான அன்புடைமை என்ற அதிகாரத்திலிருந்து
முதல் ஐந்து குறட்பாக்களை மனனம் செய்து கூறுதல்.
குறளிலக்கம்:- 71 – 72 – 73 – 74 – 75
கீழ்ப்பிரிவு கடைநிலை
31.10.2014 – 30.10.2016
திகதிக்குள் பிறந்தவர்கள்.
8 தொட. 9 வயது வரை
பதினான்காம் (14) அதிகாரமான ஒழுக்கமுடைமை என்ற
அதிகாரத்தின் ஏழு குறட்பாக்களையும் மனனம் செய்து கூறுதல்.
குறளிலக்கம்:- 131 – 132 – 133 – 134 – 135 – 136 – 137
மத்தியபிரிவு
31.10.2012 – 30.10.2014
திகதிக்குள் பிறந்தவர்கள்.
10 தொட. 11 வயதுவரை
முப்பதாம் (30) அதிகாரமான வாய்மை என்ற அதிகாரத்திலிருந்து
பத்து குறட்பாக்களை மனனம் செய்து கூறுதல்.
குறளிலக்கம்:- 291 – 292 – 293 – 294 – 295 – 296 – 297 – 298 –
299 – 300.
மத்தியபிரிவு கடைநிலை
31.10.2010 – 30.10.2012
திகதிக்குள் பிறந்தவர்கள்.
12 தொட. 13 வயதுவரை
நாற்பத்திரண்டாம் (42) அதிகாரமான கேள்வி என்ற அதிகாரத்தின்
ஏழு குறட்பாக்களையும் மனனம் செய்து பொருளுடன் கூறுதல்.
குறளிலக்கம்:- 411 – 412 – 413 – 414 – 415 – 416 – 417
மேற்பிரிவு
31.10.2008 – 30.10.2010
திகதிக்குள் பிறந்தவர்கள்.
14 தொட. 15 வயதுவரை
நாற்பத்திரண்டாம் (47) அதிகாரமான தெரிந்து செயல்வகை என்ற
அதிகாரத்தின் பத்துக் குறட்பாக்களையும் மனனம் செய்து
பொருளுடன் கூறுதல்.
குறளிலக்கம்:- 461 – 462 – 463 – 464 – 465 – 466 – 467 – 468 –
469 – 470
மேற்பிரிவு கடைநிலை
31.10.2006 – 30.11.2008
திகதிக்குள் பிறந்தவர்கள்.
16 தொட. 17 வயதுவரை
தொண்ணூற்றைந்தாம் (95) அதிகாரமான மருந்து என்ற
அதிகாரத்தின் பத்துக் குறட்பாக்களையும் மனனம் செய்து
பொருளுடன் கூறுதல்.
குறளிலக்கம்:- 941 – 942 – 943 – 944 – 945 – 946 – 947 948 –
949 – 950.
அதிமேற்பிரிவு
31.10.2000 – 30.10.2006
திகதிக்குள் பிறந்தவர்கள்.
18 தொட. 23 வயது வரை
தொண்ணூற்றாறாம் (96) அதிகாரமான குடிமை என்ற அதிகாரத்தின்
பத்துக் குறட்பாக்களை மனனம் செய்து பொருளுடன் கூறுவதுடன்,
தொண்ணூற்றேழாம் (97) அதிகாரமான மானம் என்ற
அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறட்பாக்களை மனனம் செய்து
கூறுதல்.
குறளிலக்கம்:- 951 – 952 – 953 – 954 – 955 – 956 – 957 – 958 –
959 – 960. ( பொருளுடன் கூறுதல் )
961 – 962 – 963 – 964 – 965. ( குறள்கள் மட்டும் கூறுதல் )
வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை- டோட்முண்ட்

திருக்குறள் மனனப் போட்டி – 2023

விண்ணப்பம்
விண்ணப்பத்தாரர் பெயர்:………………………………………………………………………………………………………………
( தமிழ் எழுத்துக்களில் )
……………………………………………………………………………………………………………….
( ஆங்கில எழுத்துக்களில் )
தந்தையின் பெயர்:………………………………………………………………………………………………………………………..
( தமிழ் எழுத்துக்களில் )
……………………………………………………………………………………………………………………….
( ஆங்கில எழுத்துக்களில் )
பால். ஆண்  பெண் 
பிறந்த திகதி: ……………………………………………………………………………
பங்குபற்றும் பிரிவு: …………………………………………………………………………………
(பிரிவுகளுக்கான வயதுக்கணிப்பு.2023.10.31ந் திகதி.)
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: ………………………………………………………………………………………..
( ஆங்கில எழுத்துக்களில் )
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
கைத்தொலைபேசி அல்லது தொலைபேசி இலக்கம்: ……………………………………………………………..
மின்னஞ்சல்: …………………………………………………………………………………………………………………………………
( நு-ஆயடை )
கல்வி கற்கும் பாடசாலை: …………………………………………………………………………………………………………
திருக்குறள் மனனப் போட்டியில் பங்குபற்றுவதற்கு பூரண விருப்பமுடையோம் என்பதை
அறியத்தருகின்றோம்.
………………………………………………………………..
விண்ணப்பத்தாரரின் கையொப்பம்
……………………………………………………………..
பெற்றோர் , பாதுகாவலர் கையொப்பம்

அனுப்ப வேண்டிய முகவரி:

Valluvar Tamilische Schule – Dortmund
P.Srijeevaghan
Kuhlmannsfeld 49
45355 Essen

பணம் அனுப்ப வேண்டிய வங்கி விபரம்:

Tamilischer Bildungsverein Deutschland e.V
Bank:- Sparkasse UnnaKamen
IBAN:- DE914435 0060 0005 0533 35
Verwendungszweck: Thirukkural Pooddy

மேலதிக விபரங்களுக்கு
தொலைபேசி இல: 0201 46932106 கைத்தொலைபேசி இல: 015757565305
மின்னஞ்சல் – E-Mail: jeevaghan08@gmail.com
இங்ஙனம்
வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை – டோட்முண்ட்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert