ee

நேர்காணல் IBC தொலைக்காட்சி ” லண்டன் திடீர் நாடக மன்ற கலைஞர் அருள் சதீசன் ”

IBC தொலைக்காட்சியில் லண்டன் திடீர் நாடக மன்றம் என்னை அன்போடு அழைத்து எமது நாடகப் பணி மற்றும் எனது வாழ்க்கை பற்றியும் கலந்துரையாடலை நடாத்திய அறிவிப்பாளன் கோகுலன் அவர்களுக்கும் ibc தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் –லண்டன் திடீர் நாடக மன்றம்

16649381_1861195517427275_140138677207703330_n

ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய ‘நாங்கள் விட்டில்கள் அல்ல’ கவிதை நூல் அறிமுக விழா

மரணித்த ஜீ.எம்.பரஞ்சோதி அவர்கள் எழுதிய ‘நாங்கள் விட்டில்கள் அல்ல’ கவிதை நூல் அறிமுக விழா 2007 அன்று திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பாலத்தடிச்சேனையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கிராம சேவையாளரும், ஊடகவியலாளரும், படைப்பாளருமான பொதிகை அமுதன் என அறியப்பட்ட கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி அவர்கள் எழுதிய ‘நாங்கள் விட்டில்கள் அல்ல’ கவிதை நூலின் அறிமுக விழா இடம்பெற்றது. 19.02.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு வவுனியா நகரின் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா தமிழ் … Read more

16864432_1395623767125931_770952723823627559_n

சாய்ந்து கொள் !கவிதை சதிநேசன்

பாய்ந்து சென்ற, எம்வாழ்வின் பருவகால ——பரவசப் பரஸ்பரங்கள் பகிரவும் தோய்ந்த அன்பில் நாம் கிடந்து —–துவண்ட துன்பஇன்பங்கள் துளிர்க்கவும் மாய்ந்து போனபின் மனதில் நிறுத்தி ……மண்டியிட்டு மனம் கலங்காமலும் ஓய்து போன ஒருகாலத்தில் நாம் …… ஒட்டுறவாய் வாழ்ந்து காட்டவும் சாய்ந்து கொள்வோம் எம் அன்போடு ……சதிபதி சங்கடம் சகலதும் மறந்து ஆக்கம் —-சதிநேசன்

16681657_1834418250142283_7658738089871475144_n

எந்தன் கதை!கவிதை கவிக்குயில் சிவரமணி

எந்தன் கதை சொந்தக் கதை எழுத்தில் இல்லா சோகக்கதை வசந்தம் வந்த காதல் கதை வாசல் மாறி போன கதை சொந்தம் என்ற பாசக்கதை சோகம் தந்த துக்க கதை அன்பிலே நான் வடிக்கும் காவியக் கதை அது எல்லம் பொய்யென அவள் உரைத்த கதை நெஞ்சிலே வேதனை பிழியும் கதை இதயம் வலித்து உருகும் கதை வேதனை மட்டுமே எனது கதை எந்தக் கதை சொல்ல எந்தன் கதை என்னோடு.// கவிக்குயில் சிவரமணி திருகோணமலை  

16807763_262711204153225_6836331844271515801_n

“கூரம்பு” திரைப்படம் திரையிடப்பட்டடு கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்

நேற்று சனிக்கிழமை (18.02.2017) பாரிஸ் மாநகரில் விசேட திரையரங்கில் பிரத்தியோக காட்சி! திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் “கூரம்பு” திரைப்படம் திரையிடப்பட்டது. அந் நிகழ்வு தனில்,கலைப்பயணத்திற்கு பல வகையிலும் தொடர்ந்து நல் ஆதரவு தந்து, அரவணைத்து,நல் ஆசி வழங்கி வருகின்ற பிரான்ஸ் நாட்டு பொதுச்சேவை உயர் நிறுவனங்களின் அதிகாரிகளும், அவர்கள் சார்ந்த பிரான்ஸ் நாட்டு நாடக/சினிமா கலைஞர்களும் வருகை தந்து படங்களை பார்த்தது,பாராட்டி மகிழ்ந்து சிறப்பித்தார்கள். அத்தருணத்தில்! உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க “கீதாலயா” நிறுவனத்தின் தயாரிப்பில் திருமலையூரான் எஸ். அசோக்குமார் … Read more