Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 புலம் பெயர் தேசத்தில் „புன்னகைச் செல்வர்“ „தபேலா மனோ“ அவர்கள்! – stsstudio.com

புலம் பெயர் தேசத்தில் „புன்னகைச் செல்வர்“ „தபேலா மனோ“ அவர்கள்!

புலம் பெயர் தேசத்தில் „புன்னகைச் செல்வர்“
„தபேலா மனோ“ அவர்கள்!

புலம் பெயர் தேசத்தில் இசைக்கலைஞர்கள் வரிசையில்
இசைக் கலை குழுக்களில் நீண்ட காலமாக தன்னையும்
இணைத்துக்கொண்டு தோல் வாத்தியங்களை வாசிப்பதில்
விற்பன்னராய் விளங்குவதோடு மட்டுமில்லாமல்,இனிமையாக
பாடும் ஆற்றலையும் கொண்ட
„கலைமகன்“ „தபேலா மனோ“ அவர்கள்!

புலம் பெயர் தேச தமிழ் இசைக்குழுக்களின் ஆரம்பக்கால
மூத்த முழுமையான தோல் வாத்தியக் கலைஞர் என்ற
பெருமைக்கும் உரியவர்!
(1983 பிரான்ஸ் வரலாற்றுப் பதிவு)

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“க்கும்,
அனைத்து முகநூல் உறவுகளுக்கும்
„புன்னகைச் செல்வர்“ „தபேலா மனோ“ அவர்களை,
„நெஞ்சினிலே எங்கள் நினைவினிலே“
நிறுத்தி அழகு பார்க்கும்,“திரைமுகங்கள்“ கலைத் தளத்திற்கும், அறிவிப்பாளர் „பொதுப்பணியாளர்“ அருள்மொழித்தேவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

(„திரைமுகங்கள்“ பதிவிலிருந்து…)

இசையோடு வாழும் ஒரு கலைஞர்
———————————————————
விரல்களால் நாதம் மீட்டும் ஒரு அழகிய கலைஞரை உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி. கலைக் குடும்ப வாரிசு, தந்தையார் தங்கமணி அவர்கள் வாய்ப்பாட்டு (தானே இயற்றி) மிருதங்கம், தபேலா, அமோனியம், வயலின் என அவர் விரல்கள் மீட்டாத; வாத்தியங்கள் இல்லையென்றே சொல்லலாம்.

அந்நாட்களில் அமரர் வைரமுத்து அவர்களது பல படைப்புக்களில் மிருதங்க வாத்தியக்காரராக இலங்கையின் பல பாகங்களிலும் வலம் வந்தவர். அதே நேரத்தில் தமையனார் அமரர் தங்க பாஸ்கரன் அவர்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினி ,மற்றும்; அந் நாட்களில் பிரபலமான பரமேஷ் கோணேஷ் இசைக் குழுவிலும், பின் தமிழகத்தில் M.S.V , சங்கர் கணேஷ், சிறிகாந்தேவா போன்ற பிரபல்யங்களுடன் வாத்தியக் கலைஞராகவும் பாடகராகவும் ( வேதா திரையில்) பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

சரி இப்பொழுது எங்கள் கதாநாயகனைப் பற்றி யாழ் வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாக கொண்டு இன்று ஐரோப்பிய நாடுகளில்; தபேலா மனோ; என அன்புடன் அழைக்கப்படுபவர் பாடசாலை நிகழ்வுகளில் ஆரம்பித்து 1981ல் தந்தை, மற்றும் தமையனாருடன் வீரசிங்கம் மண்டபத்தில்; விரல்கள் மீட்ட 82ல் யாழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தாளவாத்திய நாடகத்தில் வாசித்தமைக்காக சிறப்பிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் அந்நாட்களில் "யாழ் வண்ணார் பண்ணை இராமசாமி இசைக்குழுவிலும்; தபேலாக் கலைஞராக வலம் வந்தவர் காலத்தின் கோலமாக 83 ல் புலத்தில் (France) ல் கால் பதித்தவர்; பின்; நாளில் அமரர் பஞ்சரட்ணம் அவர்களது; ஹைரோன் இசைக்குழு; குருநாதன் அவர்களின்; பாரீஸ் இளைய நிலா; தில்லைச் சிவம் அவர்களது; ஈழநிலா; மற்றும்; சப்தஸ்வரங்கள்; சுபஸ்வரங்கள்; ஸருதிலயா; தென்றல்; என நீண்டு சென்றாலும் தற்காலத்தில் பல ஆண்டுகளாக; ஞானதாஸனின் பாரீஸ் சுப்பர் ரூயூனர்.

இதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும், இசை நிகழ்வுகள்,மற்றும் நாடகங்கள், நாட்டுக்கூத்து, என நீண்டு செல்லும் கலைப் பாதையில் அமரர் பஞ் அவர்களது இசையில் உருவான M.P பரமேசின் சங்கீத சாம்ராஜயம்; ந‌வாஜோதி அவர்களது பிஞ்சு நிலா; தில்லைச்சிவம் அவர்களது பல விடுதலைக்கான இறுவட்டுக்கள், 2016 ல் வெளியாகிய M.அரியநாயகம் அவர்களின் கூத்திசைப் பாடல்கள் இறுவட்டு மேலும் France ல் வெளியான பிரியாலயம் துரைஸ் அவர்களது „ராஜாவின் ராகங்கள்“ முழு நீள திரைப்படம் உட்பட தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன் குரலால் பங்கெடுத்த செல்லப்பா அவர்களின் France நிகழ்விலும், தமிழகத்தின் பிரபல கிராமியப் பாடகர் புஸ்வானம் குப்புசாமி அவர்களின் France நிகழ்விலும், பாரீஸ் சுப்பர் ரீயூனஸ் இசையோடு T.M.S .செல்வகுமார் அவர்களது பாடல்களுக்கும் , இவற்றிக்கும் மேலாக வேற்று மொழி இசைக் குழவினர்களோடும் அராபிய மொழியில் க‌லித்திலும் ம‌ற்றும் ரிச்சா என்னும் பிலிப்பைன்ஸ் மொழி இசைக் குழுவுடனும் வாசித்த பெருமையுடன், தமிழர் புனர் வாழ்வுக் கழகம் நடத்தும் விளையாட்டு விழாவில் (2012ல்) கங்கை அமரன் அவர்கள் பாட்டிற்கும்; இராகசங்கமம் பாடல்ப் போட்டியிலும் பாரீஸ் சுப்பர் ரீயூனஸுடன் இணைந்து கடந்த 9 வருடங்களாக சிறப்பித்து வருவது இவரின் சிறப்பம்சம்.

தனது கலை வாழ்க்கையில் வலதுகரமாக விளங்குபவர் தனது துணைவியார் என்பதை அடிக்கடி கூறும் இத்தனை பெருமைகளைக் கொண்ட; *தபேலா மனோ* அவர்களது பல நிகழ்வுகளில் நான் அறிவிப்பாளராக பணியாற்றியமை மகிழ்வைத் தருகின்றது. இத்தனை பெருமையுள்ள கலைஞனை உங்கள் முன்னிலையில் எடுத்து வந்தமைக்கு மகிழ்கிறேன்!

கலைஞர் அருள்மொழித்தேவன்.

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“