Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 யேர்மனியில் செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் சிறப்பான பரதநாட்டிய அரங்கேற்றம்! – stsstudio.com

யேர்மனியில் செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் சிறப்பான பரதநாட்டிய அரங்கேற்றம்!

நிருத்திய நாட்டியாலய அதிபரும், ஆசிரியையுமான, நாட்டிய கலைமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார். அவர்களின் மாணவிகளான செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் 30.03.2019.அன்று யேர்மனியில் marl. நகரில் சிறப்பாக நடைபெற்றது. அரங்கேற்ற விழாவிற்கு தலைமை, விருந்தினராக வெற்றிமணி பத்திரிகை பிரதம ஆசிரியர் கலாநிதி, மு. க. சு. சிவகுமாரன். அவர்களும் பிரதம, விருந்தினராக திருக்கோணேஸ்வரர் நடனாலய (சுவிஸ்) அதிபர் நாட்டியக்கலைமணி திருமதி மதிவதினி சுதாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினராக திரு.கி.த.கவிமாமணி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

துர்க்காதுரந்தரர் ஜெயந்திநாதக்குருக்கள் அவர்களின் நடராஜர் பூஜையுடன் அரங்கேற்றம் ஆரம்பமானது.

விநாயகர் துதியில்; தொடங்கி மங்களம் வரை சிறப்பான முறையில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அதில் ஆர்ப்பாட்டமில்லாமல் தேவையான அடவுகள் அங்கு காணக்கூடியதாக இருந்தது. மரபுமாறாத நடனத்தை கண்டுக் கண்டு யாவரும் வியந்தனர்.
நுடனத்தில் வர்ணம் ஆடும்போது மண்டபம் நன்கு அமைதியாக இருந்தது. அது எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. அந்த வர்ணத்தில். நவரசங்களும், முழுமையாக அமைந்திருந்தது. நடனத்தின் முலம் ஆசிரியரின் திறமையும் கற்பனை வளத்தையும் காணக்கூடியதாக இருந்தது. ராகவியும், யாகவியும் தங்களுடைய பாவத்தை மிக சிறப்பாக எது தேவையோ. அதை நிவர்த்தி செய்திருந்தார்கள். அதை இந்த பரதநாட்டியத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இசை வேளையில் நிரோஐனின். என்ன தவம் செய்தனை. என்னும் பாடலை சிறப்பாகப் பாடியிருந்தார். அந்த இளம் வாய்ப்பாட்டு கலைஞனுக்கு எமது பாராட்டுக்கள். வயலினும், மிருதங்கமும் நடனத்துக்கு உயிர் கொடுத்தது.

தலைமை விருந்தினராக வெற்றிமணி பத்திரிகை, சிவத்தமிழ் சஞ்சிகை ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் கலாநிதி மு.கசு.சிவகுமாரன் அவர்கள் கலந்து உரையாற்றினார். ஆவர்தம் உரையில் பொதுவாக ஒரு மாணவிக்கு அரங்கேற்றம் செய்வது சுலபம் அங்கே ஒப்பீடு பரதத்துடன் மட்டுமே இருக்கும் ஆனால் இங்கு இருமாணவிகள் என்பதால் ஒப்பீடு இரு மாணவிகளின் அசைவிலும் அது இருக்கும். அது மட்டுமன்றி பாடல்கள் இருவருக்கும் ஏற்றவகையில் தேர்வு செய்யவும், பாடவும் வேண்டிய பொறுப்பு அதிகமாக இருக்கும். இப்பாரிய பொறுப்பினை கச்சிதமாகச் செய்த குருவைப்பாராட்டவேண்டும். அதற்கு இசைவாக கடும் உழைப்பை நாட்டியத்தில் காட்டிய மாணவவகளையும் பாராட்டியே ஆகவேண்டும் என்றார்.

பேரழகு
அத்துடன் அமலா அன்ரனி சுரேஷ்குமார் நட்டுவாங்கம் செய்வது அழகு. சங்கீதரத்தினம் ச.பிரணவநாதன் மிருதங்கம் வாசிப்பது அது அழகு. நெல்லை இராதாகிருஷ்ணன் வயலின் வாசிப்பது அது அழகு. அதுபோல் எங்கள் இளம் கலைஞர் நிரோஜன் அவர்களுக்கு வாய்ப்பாட்டு அது பேரழகு. இந்த இடத்தில் நீ அழகு என்பதனை உணர்ந்து வா தம்பி வளர்ந்து வா! என வாழ்த்தினார்.

தலைமை விருந்தினர் கலாநிதி மு.க.சுசிவகுமாரன் அவர்கள் வெற்றிமணி சார்பாக அரகேற்ற நாயகிகளுக்கு வளர் கலைவிருது வழங்கிக் கௌரவிக்க, மாணவியின் குருவாகிய நாட்டியக்கலைமணி அமலா சுரேஷ் அன்ரனி அவர்கள் மாணவிகளுக்கு அரங்கேற்றச் சான்றிதழை வழங்கினார்கள்.

பிரதமவிருந்தினராக திருக்கோணேஸ்வரர் நடனாலய (சுவிஸ்) அதிபர் நாட்டியக்கலைமணி திருமதி மதிவதினி சுதாகரன் அவர்கள் கலந்து மாணவிகளின் நடனத்தை மிகத் துல்லியமாக அவதானித்து ஒவ்வொரு அசைவுகளையும் மெச்சி வாழ்த்தி உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக திரு.கி.த.கவிமாமணி அவர்கள் நாட்டிய மங்கையரின் நடனச்சிறப்பையும், வாய்ப்பாட்டுக் கலைஞர் திரு நிரோஜன் அவர்களையும் சிறப்பாக வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

சிம்மக்குரலோன், லோ. வலரன்ரையினதும், பென்சியா டொன் பொஸ்கோ. அவர்களது அறிவிப்பு மேடையை மேன்மை படுத்தியது. ராகவி, யாகவி இருவரும். தொடர்ந்து இப் பரதக்கலையை பயின்று குருவுக்கும். பெற்றோர்க்கும் பெருமை சேர்க்க வேண்டி வாழ்த்துகின்றோம்..