மண் பார்த்து நடப்பவளே
மாமன் பெத்த மரகதமே
கோயிலுக்குப் போகையிலே
என்னைக் கொய்து போறவளே
மல்லிகைப் பூ மணமணக்க
தள்ளாட வைப்பவளே
இடுப்போரக் கொசுவத்துல
என்னையும் நீ சொருகிறியே
வரப்போரம் நடக்கையிலே
என் வாலிபத்தை முறுக்கிறியே
நீ கரகாட்டம் ஆடயில
நான் கிறங்கிப் போறேன் ரத்தினமே
காற்சலங்கை நாதத்திலே
காதல் மொழி பிறக்குதடி
கன்னக்குழிச் சிரிப்பழகில்
கொள்ளை போகும் மனசுமடி
நாளும் உந்தன் நினைப்பினிலே
தேய்பிறையாய் ஆனேனே
நாயகியே என் வாழ்வில்
ஒளியேற்ற வருவாயே
மல்லிகைப் பூ மணமணக்க
வன்னியூர் இனியவள்