தாயகத்தில் ஈகுருவியின் புதிய வெளிச்சம்

கனடாவைத் தளமாகக் கொண்ட இகுருவி ஊடகத்தாரின் ஏற்பாட்டில் புதிய வெளிச்சம் என்ற தலைப்பில் அமைந்த வழிகாட்டல் கருத்தரங்கு இன்று 02.01.2018 தொடக்கம் முன்னெடுக்கப்படுகின்றது.
.
கல்விசார் கருத்தரங்கு ஆசிரியர்களுக்கு எனத் தனியாகவும் மாணவர்களுக்கெனத் தனியாகவும் நடைபெறுகிறது. இதைவிட விவசாயிகளுக்காகத் தனியான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
.
இதன் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு யாழ். மரியன்னை வித்தியாலயம், கிளிநொச்சி பிரதேச செயலகம் அருகில் உள்ள தொழினுட்ப கற்கை மண்டபம், முல்லை வலயக் கல்விப் பணிமனை என்பவற்றில் இன்று தொடக்கம் ஆரம்பமாகி மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது.
.
இந்த நிகழ்வுகளின் ஆற்றுப்படுத்துநராக தமிழகத்தின் பிரபல உளஆற்றுப்படுத்துதல் பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் விளங்குகின்றார். இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஐவர் வருகை தந்துள்ளனர். அத்துடன் புலம் பெயர் தேசம் சார்ந்தும் (கனடா, சுவீடன்) கல்வியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
.
வருகை தந்த கல்வியாளர்களுக்கும் உள்ளுர் ஆர்வலர்களுக்கும் இடையிலான சந்திப்பு 01.01.2018 புன்னாலைக்கட்டுவனில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதன் புகைப்படம் இணைப்பில் உள்ளது.
.
விவசாயிகளுக்கான கருத்தரங்கை மேற்கொள்ள தமிழகத்தின் பிரபல இயற்கை விவசாய நிபுணர் பாமையன் வருகைதரவுள்ளார்.
.
நிகழ்வின் ஒருங்கிணைப்பை இகுருவியின் இயக்குநர் வல்வை அனந்தராஜ் நவஜீவன் மேற்கொண்டுள்ளார்.
……………………………………………………………………………
ஜனவரி 02 இலிருந்து 14 ம் திகதி வரை நடைபெறவுள்ள கருத்தரங்குகள் பற்றிய விபரம்.
.
கல்வி

1. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.

A. யாழ்ப்பாண மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
B. கிளிநொச்சி மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
C. முல்லைத்தீவு மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.

2) அதிபர்களுக்கான நிகழ்வு
1) யாழ் வடமராட்சி வலயம் 2 ம் திகதி
2) கிளிநொச்சி மாவடட அதிபர்களுக்கானது 4 ம் திகதி

2. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.
A. யாழ்ப்பாண மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். B. கிளிநொச்சி மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். C. முல்லைத்தீவு மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள்.

விவசாயம்

3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.

A. யாழ்ப்பாண மாவட்டம் – 4ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
B . மட்ட்க்களப்பு & அம்பாறை – 6, 7 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
C. முல்லைத்தீவு மாவட்டம் – 8ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
D. கிளிநொச்சி மாவட்டம் – 9ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
E. மன்னார் மாவட்டம் – 10 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை (
Thadsanamaruthamadu Maha Vidiyalayam)
F. முல்லைத்தீவு மாவட்டம் -11 ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.(Mallavi sivan Temple)
G . வவுனியா மாவட்டம் – 11ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
4 யாழ்ப்பாணம் – 13ஆம் திகதி – அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் – முழுநாள்

5) யாழ்ப்பணம் பொதுமக்கள் வீரசிங்கம் மண்டபம்

6) முடிவு விழா – பொங்கல் விழா – கிளிநொச்சி