யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பாக நடந்தேறிய பொங்கல்விழா

யேர்மனி டோட்முண்ட் நகரில் வர்த்தகரும் மக்களும் இணைந்து 20.01.2018 பொங்கல் விழாவானது அனைவரும் இணைந்து கரம் கோர்த்து ஐந்தாவது ஆண்டை கண்டுள்ளது இந்த சிறப்புக்கு காரணம் அனைவரின் இணைவின் பலம் எனலாம் இன்நினழ்வாது 3.30 மணிக்கு ஆரம்பமானது


விழாகுழுவினர். பிரதம விருந்தினரும் ஐரோப்பாவில் புகழ்பூத்த மங்கலவாத்தியக்கலைஞர்கள் திரு செல்வநாயகம், திரு பாலமுரளி குழுவினர் அழைத்து அரங்கு வர, டோட்முண்ட் சிவன் ஆலயக்குரு திரு தெய்வேந்திரஐயா,சுவெற்ற கனகதுர்கை ஆலயக்குரு ஐெயந்திநாதசர்மா, டோட்முண்ட்மானகரசபை உறுப்பினர் எனஆரம்பமாகி
மங்கய விளக்கேற்றல்,அகவணக்கம், தமிழ்வாழ்த்துப்பாடல் என ஆரம்பித்து குரலிசைப்பாடல்கள், நடனங்கள், வயலின்மிருதங்க இசை, நாடகங்கள் எனசிறப்பாக கிட்டத்தட்ட 100 இளம் கலைஞர்கள் அரங்கம் கண்ட நிகழ்வாக அமைந்திருந்தது.

இதில் சிறப்பாக இசை நிகழ்வும் இடம்பெற்றது மட்டுல்ல கிட்டத்தட்ட ஐநுாறுபாரவையாளர்கள் நிகழ்வுகளை அமந்து பார்த்த சிறப்பானநிகழ்வாக அமைந்தது மட்டுமல்ல மக்களின் இணைவின் பலத்தைக்கண்ட சிறப்பையும் காணக்கூடியாதாக இருந்ததும் சிறப்பு இவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்