***கலை***


கலை வளர்ப்போம்!!
கலையை வாழ வைப்போம்!!! என்று
கதை கதையாய்
கதைத்து விட்டு ,
கலைஞரை பழைய
கால்ச்செருப்பாய் மிதிக்கும்
கலைஞர் கூட்டத்தில்த் தான்
காலத்தை நாங்கள் கழித்துக்கொண்டிருக்கிறோம்.
கண்ணுக்கு முன்னால்
கனிவாக பேசுவதும்,
காணாத இடத்தில்
காஷியப்பொருளாக்கி நகைப்பதும்,
கலைஞர்களின் முத்திரையாகி விட்டது.
கலைஞர்கள் ,தமது
கலை வாழ்கையில்
கர்வம் தலைக்கேறிய
கலை கொலைஞர்ளாகத் தான் காணப்படுகிறார்கள். பெரும்பாலும்.
கச்சேரிகளிலே இன்னுமொரு
கலைஞன் தன் திறமையைக்
காட்டிவிட்டால் தன்னுடைய
கழுத்துக்கு எங்கே,
கத்தி வந்து விடுமோ என்று
கதி கலங்கிபோவதும் ,
கலைஞன் புதியவனாகில் அவனைக்
காக்கவைத்து ரசிப்பதும் , முடிவில்,
காணாது நேரம் ‚என்று தட்டிக்
கழித்து அவமதிப்பதும் ,
கருவிகளைப் பிழைக்கப்படுத்தி
காலம் கடத்தி கோழையாக்குவதும்,
கலை வாழ்வுக்கு அழகல்லவே..
கலைஞர்களுக்குள் எப்போதுமே
கனகாத்திரமான போட்டிகளைக்
கடைபிடிப்பது ஆரோக்கியமே ,அதுவே கலைத் திறனை வளர்க்க வல்ல காரணியும் ஆகும் ..இன்னுமொரு
கலைஞரை கௌரவிப்பதே நல்ல
கலைஞனால் உலகக் கலைக்கு
காட்டி மகிழக்கூடிய
கலைத் தொண்டு என்பதை ,
கலைஞர்கள் உணர்வதே சிறந்த
கலைப் பண்பாகும் .
கடவுள் படைப்பில்
கலை என்பது மற்றவரை
களிப்பில் ஆற்றவே படைக்கப் பட்டது. கலைஞரை மேன்மைப் படுத்தும் கண்ணியமே ஒரு நல்ல மனிதனின்
கடமையாகும் .
கலை படைப்போம் அல்லது அதை
காத்து நடை போட்டு
காலத்தை வெல்வோம்.
….
களைத்த நேசன்