இணுவையூர் ஒன்றியம் மூன்றாம் ஆண்டு கலைமாலை விமரிசயாகக் கொண்டாடப் பட்டது.

இணுவையூர் ஒன்றியம் மூன்றாம் ஆண்டு கலைமாலை நிகழ்வானது வெகு விமரிசயாகக் கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்விலே இலங்கையில் இருந்து பிரதம விருந்தினரும், டென்மார்க், சுவிஸ், அவுஸ்த்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தார்கள். தமிழ் மொழி பாதுகாத்தல், ஆரோக்கிய வாழ்வு, இளைய சமுதாயம் இளமை நோன்பு காத்து இனிய நெடிய வாழ்க்கை வாழ்வதற்கு உரிய வளிமுறைகள், இணுவையூரின் வரலாறு ஆவணப் படுத்தப்பட் வேண்டும் முதலிய விடயங்கள் முன்வைக்கப் பட்டது. கலைக்கொத்த மண்ணாம் இணுவையின் பொண்வாழ் கலைஞர்களின் கலை நிகழ்வுகள், தனி வாத்திய விருந்து,பழம்பெரும் கலையாம் அகில ஜேர்மன் ரீதியில் கலைஞர்கள் கலந்து சிறப்பித்த வசந்தன் கூத்து போன்றன விழாவிற்கு மெருகூட்டியது. கலைஞர்களுக்கும் விருந்தினர்களுக்கும் கௌரவ வைபவமும் நடைபெற்றது