Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 ஊடகர் விமல் குமாரசாமி அவர்களின் 52வது பிறந்தநாள்(16.06.18) – stsstudio.com

ஊடகர் விமல் குமாரசாமி அவர்களின் 52வது பிறந்தநாள்(16.06.18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ‌் நாட்டில் வாழ்ந்துவருபவருமான விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாள் 16.06.2018இவர் புலம் பெயர்வாழ்வில் இணையத்தளங்கள் உருவாக்கும் வல்லமை பெற்று தன் பணியை ஊடகத் துறையில் இணை த்து பணி தொடங்கினார்.
சிறுப்பிட்டி மண்ணின் பிறப்பு .இவன் எங்கள் மண்ணில் பிறந்ததே தனிச்சிறப்பு
எமது ஊருக்காய் இவர் செய்த பணிகள் என்ன?பேச்சிலே வீரம் கொள்ளாது செயல் வடிவில்
எதையும் ஆக்கிவைக்கும் வீரன்.பேரின்பம் அதில் காணும் நல்ல தோழன்.
நேர் பாதையில் நடந்து செல்லும் நோக்கம் நீதியின் பார்வை தான் இவன் போக்கு
தாயானாலும் தாரமானாலும் உடன் பிறந்தோர் ஆனாலும் உறவுகள் ஆனாலும் ஊரானாலும்
தவறுக்கு இடம் கொடுக்கமாட்டான்.
பேச்சிலே சல சலப்பு இருக்கும் ஆற்றிடும் சேவையில் நல் நோக்கிருக்கும்
தான் வளர்ந்தது மட்டுமல்லாமல் பல இணையங்கள் வளரக்காரணமானவன்
ஊர் இணையங்கள் மேல் இவனுக்கு தனி ஆசை அவற்றை வளர்த்து விடுவதிலும் தணியாத ஆசை
இவன் எழுத்து வன்மை மிக்கவன் எவருக்கும் அஞ்சாது நிற்பவன் நீதியை நெஞ்சில் சுமந்து
நேர் நோக்காய் போரிடும் வீரனாய் உலாவருபவன் நாட்டிலும் நல்ல காரியங்களிலும் ஒன்றியங்களிலும் நல் நோக்குக் கொண்டு செயலாற்றுபவன் இணையப் பரப்பில் இன்றைய உலகில் எத்தனையோ நல்ல விடையங்களைச் செய்து வருகின்றனர்அந்த வகையில் சிறுவை தந்த சிப்பியாக ஊடகக் கவிஞன் விமல்
எங்கள் சிறுப்பிட்டியை முழு உலகும் அறியவைத்த ஆற்றல் மிக்கவன்.தன் ஊர் மீதும் உறவுகள் மீதும்பற்றுக் கொண்டவன்.
பல கவிஞர்களை பாடகர்களை வெளிக்கொண்டுவரக் காரணமானவன் பல படைப்பாளிகளை வெளிக் கொண்டு வரக் காரணம் ஆனவன் வெளி நாடு வந்து வீணே துாங்காது ஊரின் பெயரில் இணையத் தளம் தந்தவன்
இவனை பாரில் வாழ் எம் தமிழ் உறவுகள் சார்பில் இணையப்பரப்பில் இன்னும் பல சேவைகள் செய்து நீடுழி வாழ்க என வாழ்த்துவோம்
வளம்பொங்கி வாழ்க
இனிய உள்ளம் கொண்டவனே!
இணையத்தால் எம்மோடு இணைந்தவனே !
இன்பமாய் கதை உரைத்தாய்
இதயத்தை உன்வசம் இழுத்தாய்!
சிந்தையில் புதுமை கொள்வாய்
சிந்தித்து செயலும் செய்வாய்!
பந்தத்தை காத்து நிற்பாய்
பணியாற்றி மனம் மகிழ்வாய்!
பாசத்தில் சிகரமாவாய்
பரிவுற்று செயலும் செய்வாய்!
நீ பல்லாண்டு வாழ்ந்து
பலசேவை செய்து
பல காலம் வாழ்க என
வாழ்த்துவோர்
மனைவி பிள்ளைகள்
இரத்த உறவுகள் ஊர்வாழ் உறவுகள் நண்பர்கள்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்
ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா குடும்பத்தினர்.
ராஜன் குடும்பத்தினர் சுவிஸ்
அருண் குடும்பத்தினர் சுவிஸ்
நடராசாகுடும்பத்தினர் சுவிஸ்
தேவன் குடும்பத்தினர் சுவிஸ்
கவிஞர் என்.வி.சிவநேசன் குடும்பத்தினர்.
பாடகர் காந்தக்குரலோன் கானமணி கணேஸ்ரஐன்
நடராசா குடும்பத்தினர்.
ஊடகச் செம்மல் மணிக்குரல் தந்த முல்லை மோகன் குடும்பத்தினர்
பாடகர் ஐெயா குடும்பத்தினர்
பாடகர் யோகன் குடும்பத்தினர் மற்றைய கலைஞர் குடும்பங்களும் இணையக் குடும்பங்கள்
வாழ்க வளமுடன் என வாழ்க உங்கள் பணிகள் உலகப்பரப்பில் வளம்பெறுக எம்மொழிகாத்து நின்று .
எஸ்.ரி .எஸ்கலையகம் டோட்மூண்ட் யேர்மனி.
வாழ்க வளமுடன்
சிறுப்பிட்டி நெற்றுக்கான இணைப்பு எஸ்.தேவராசா யேர்மனி