துன்பத்தில் நிம்மதி தேடு

நிழல் என்னை நோக்கி வந்தது. -மகிழ்ந்தேன்
நியமென்றே எண்ணினேன். -மதியம்
என்னுள் கலந்தது பூரித்தேன். -மீண்டும்
என்னை விட்டு விலகத் தெடங்கியது

வருந்தினேன் வினாவினேன்.
உருகினேன் அதன் பின் உணர்ந்தேன்.
என் நிழலிடமே ஏமார்ந்தேன். -அறிந்தேன்
எங்கோ உள்ள சூரியனின்
கைக் கூலி நிழல் என்று.

இரவு முழுவதும் வருந்தினேன்.
இருட்டில் மூழ்கி உறங்கினேன்.
இன்பம் வரும் இருக்கும்
இல்லாமல்ப் போகும். -அது
இறைவனின் கைக்கூலி
துன்பத்தில் நிம்மதி தேடு, -அதுவே
தூய்மையானது.

 

ஆக்கம் வினோ நாதன் யேர்மனி