இசையமைப்பபாளர் திரு.திருமதி.தில்லைச்சிவமும்,பத்மா தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்து 15.03.2022

பிரான்ஸில் வாழும் மூத்த இசையாளன், திரு.தில்லைச்சிவமும்,பத்மா தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்து அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறையாசியுடன் கூடிய எமது வாழ்த்துக்கள்!
மூத்த இசையாளன் தில்லைச்சிவத்தின் சாதனைப்பட்டியல் மிக நீண்டது! சுருங்கச் சொல்வதும் கடினமானது!
ஈழநிலா இசைக்குழுவின் நாயகனாக பல இசை நிகழ்வுகளை ஐரோப்பிய நாடுகளெங்கும் நடத்தியிருக்கிறார். அதில் பல தரப்பட்ட நிகழ்வுகள் எழுச்சி மேடைகள்.
100 க்கும் மேற்ப்பட்ட எழுச்சி,திரையிசை,(மெல்லிசை) பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
100க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இவரிடம் இசை பயின்றிருக்கிறார்கள்(கீ போட்) பயின்ற மாணவர்கள் இன்று இசைத்துறையில் மிகவும் பிரகாசிக்கிறார்கள்.
ஜெர்மனி வில்லிசை ராஜன் அவர்கள் தயாரித்து மூத்த கலைஞர் A,ரகுநாதன் அவர்கள் இயக்கிய „நினைவுமுகம் „முழுநீளத்திரைப்படத்துக்கும்,பிரான்ஸில் அமரர் கீழ்க்கரவை பொன்னையன் அவர்களின் எழுத்து இயக்கத்தில் உருவான முழுநீளத்திரைப்படங்களான „சத்தியகீதை“ தீமழை“ புயல் „போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு எனது „நீந்த தெரியாத மீன்கள் „தொலைக்காட்சி நாடகத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
பிரான்ஸ் திருமறைக்கலா மன்றத்தின் மேடைநாடகங்களுக்கும் இசையமைத்து சிறப்பித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாது பல பாடல் போட்டிகளுக்கு நடுவராகவும் கலந்து அவ்நிகழ்வுகளுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
இவரை 2016. ஆண்டு R.T,M Brother’s தங்கள் இசைபாடும் (கலைத்தென்றல்) கலைஞர் கௌரவிப்பில் இவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதே போன்று இவரை பாராட்ட பல நிறுவனங்கள் தயார் நிலையில் நிற்கிறதென்பது இது வரை இவருக்கும் தெரியாத மகிழ்வான செய்தி!!
நான் பதிவிட்டதோ இசையாளன் தில்லையின் சாதனைகளில் பாதி! இன்னும் இருக்கிறது தில்லையின் சாதனைகளின் மீதி!
அதேவேளை 15.03.2018 இன்று வருகின்ற 25 ஆண்டு திருமணநாளை பாரிஸில் தமது கலையுலக நண்பர்கள், மாணவர்கள், உறவுகள், அனைவருடனும் 17.03.18 அன்று சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள். திரு,திருமதி, தில்லைச்சிவம் தம்பதியினர்.
வெள்ளிவிழா காணும் திரு.திருமதி தில்லைச்சிவம் தம்பதியினர் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ இறையாசியுடன் கூடிய இனிய எமது நல்வாழ்த்துக்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert