உலக தாய்மொழி தினம்

பாதத்தில் சிலம்பும்
இடுப்பில் மணிமேகலையும்
கழுத்தில் சிந்தாமணியும்
காதுகளில் குண்டலகேசியும்
கைகளில் வளையாபதியும்
சூடி மிடுக்குடன் நடைபோடும்
தமிழன்னையின் தாய்மொழி
தமிழ் மொழி !!!
உலகின் மூத்தமொழியாய்
மொழிகளுக்கு அதிபதியாய்
உயிர் கொடுத்து மெய்யூட்டி
உயிர் மெய்யாகி தமிழ்
நெடுங்கணக்கில் முத்திரை பதித்து
எழுத்தியல் சொல்லியல்
தொடரியல் புணரியல்
பொதுவியலென இலக்கண
ிலக்கியத்தால் அரியணை
ஏறிய மொழி தமிழ் மொழி!!
உலகம் போற்றும் திருக்குறள்
எழுதப்பட்ட மொழி
அது நம் தாய்மொழி
கலைகளாலும் கட்டுரைகளாலும்
உரைகளாலும் கவிதைகளாலும்
பல்துறை அரங்கிலும் பவனி வரும்
தன்மானத் தமிழரின் தாய்மொழி
தமிழ்மொழி!!
தான் வாழும் இடமெங்கும்
தமிழ் மணம் பரப்பும்
உறவுகள் அனைவருக்கும்
தாய்மொழி தின நல்வாழ்த்துகள்!!!
-கௌரி-