ஊமை நெஞ்சின் ஓசை!கவிதை கவித்தென்றல் ஏரூர்

கற்புக்கு காவலென்று கைபிடிக்க வந்தாய்
கட்டிய தாலி வெறும் கண் துடைப்பாய்
கட்டுக் கட்டாய் காசி வாங்கி மணந்தாய்
கற்பையும் நான் தந்து விட என்னை வதைத்தாய்

பொத்தி வைத்த ஆசைகளை
மெத்தையிலே பந்தி வைத்தேன்
கற்பனையில் தீய வைத்து
கட்டிலிலே காய வைத்தேன்

சொத்தை மட்டும் வாங்கி நீ என்ன பலன்
சுகத்தை நீ வழங்காவிட்டால் தேகத்துக்கு என்ன பயன்
முத்தம் மட்டும் மூர்த்தமென்றால் முரண்
செத்துவிட தோணுதிந்த கல்யாண வரண்

எட்டயிருந்து ரசிக்க பெண் நிலவா
மொட்டவிழுந்த பூவு உனக்கு தொந்தரவா
பொட்டு வைத்து பூமுடித்தேன் பல கனவா
கிட்ட வந்து உறங்கிடவா என் கணவா

பத்து வித கட்டளையும் கட்டிலிலே
பத்து விரல் தொட்டுவிட தோதுதில்லையே
பச்சை உடல் பத்துவதை எண்ணலியே
(தாம்) பத்தியமா படுத்துறங்க முடியலயே

காசி மோகம் உள்ள உனக்கு காமமில்லையா
கட்டிலிலே தவிக்கிறேனே நான் பாவமில்லையா
கை தொட்டுவிட மறுக்கிறியே ஆண்மையில்லையா
கல்யாணம் கட்டிக் கிட்ட உன்ன என்ன சொல்லையா

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்