என்னுள் எழுந்தது..


விவாதங்கள்
வினையாகும்
என்றறிந்தும்
ஏதோ ஒன்று எமை
அறியாமலே
நெருக்கி நொருக்குகின்றது..
விட்டுக்கொடுப்பு
பட்டுத்தெறிக்குது
ஏற்புடமை ஏறெடுக்க
மறுக்கின்றது. மனித
மனம் மௌனிப்பில்
நித்தம் கரைகின்றது..
தலைமுறை வெளி
தனித்துவமாக நிமிருது
இலைமறை காய்களை
இணைக்க மறுக்குது
கேட்ட குரலல்கள் கேட்காமலே
கேள்விகளை வேள்விகளாக்கி
கலைகின்றது..
யாகம் வேறு
தியாகம் வேறு
தானம் வேறு தர்மம் வேறாகி
உலகம் நகருது.
புரிதலின்றி புன்னகைப்பது
புதிய நோயாகி வளருது
பூவுலகம் தேறுமா.?
நான் படித்தவனல்ல
பண்டிதனுமல்ல
பண்பு தெரிந்தவன்
அதனால் நான் நானாகவே
நாளும் நகர்வது சிறப்பு.!

கவிஞர் தயாநிதி