கடலினை வரைந்த தேவதை ‚சாரங்கா

ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல பெண் படைப்பாளுமைகளின் படைப்புகள் தனித்துவமானவையாகவும் ஈழத்து இலக்கியத் திற்கு உரமாகவும் வளமாகவும் அமைவதைக் காண்கின்றோம். அந்தவகையில் 90 களின் ஆரம் பம் முதல் தற்போதுவரை அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பெயராக ‚சாரங்கா‘ விளங்குகின் றார். „ஏன் பெண்ணென்று“ என்னும் சிறந்த சிறு கதைத்தொகுப்பு வாயிலாக ஈழத்து வாசகப் பரப் பில் தன் பெயரை மணம்வீசச் செய்தவர் ‚சாரங்கா. தாட்சாயணி, இராஜேஸ்கண்ணன், இ.சு.முரளி தரன், கோகுலராகவன், இயல்வாணன், சிவானி, தொல்புரம் சி.கதிர்காமநாதன், ராகவன், தி. செல்வ மனோகரன், மகாலிங்கசிவம், சாரங்கா, குமுதினி போன்ற படைப்பாளிகள் 90 களின் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்து ஈழத்து இலக்கியத்தின் நம்பிக் கைக்கு உரிய நட்சத்திர எழுத்தாளர்களான விளங் குகின்றார்கள். இவர்கள் அனைவருமே தொடர்ச் சியாக எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபடுபவர் கள். இவர்கள் அனைவருக்கும் இன்னொரு ஒற் றுமையும் உண்டு; அனைவரும் உதயனின் சஞ் சீவி பகுதியால் இலக்கிய வானில் வலம்வர ஆரம்பித்தவர்கள் என்பதே அந்த ஒற்றுமை.

குணாளினி என்னும் இயற்பெயரை உடைய சாரங்கா 10.2.1975 இல் சங்கானையில் சதா சிவமூர்த்தி கனகம்மா தம்பதிகளுக்கு மகளா கப் பிறந்தார். யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி யில் பாடசாலைக்கல்வியைப் பெற்றுக் கொண்ட சாரங்கா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக B.A.பட்டம் பெற்றவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார். பாடசாலைக் காலம் முதல் இலக்கியத்திலும் வாசிப்பிலும் ஈடு பாடு உடையவராக விளங்கிய இவர் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு ஈழநாதத்தில் 1992இல் வெளியான ‚ஒன்றரைக்கால்‘ சிறுகதையூடாக எழுத்துலகில் பிரவேசித்தார். தொடர்ச்சியாக சிறுகதைகள். கவிதைகள், கட்டுரைகள். சிறு வர் கதைத்தொடர்கள், பெண் ணியம் சார் விடயங் கள் என்மனதில் தொற்ற வைப்பதில் சாரங்கா மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளாகத் திகழ்கின்றன. இவ்வேளை புலோலியூர் க.சதா சிவம் சாரங்காவின் எழுத்து தொடர்பாக முன்வைத்த கூற்றை இங்கு பதிவு செய்வது அவசியம் எனக்கருதுகின்றேன்.

„சாரங்கா நவீனத்துவ இயல் புகளை நேர்த்தியாக உள் வாங்கி, இயற்பண்பியலின் நல்ல அம்சங்களையும் தனக்கென ஒரு தனிப்பா ணியை அமைத்த ஆக்க ஆளுமையுடைய படைப்பாளி.“

2000 இன் முற் பகுதியில் சாரங்கா இங்கிலாந்து நாட் டிற்கு புலம் பெயர்ந்தார். அதன் பின்னர் அவரது தொடர் எழுத்துச் செயற் பாடு சிறிது

தடைப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் ஜீவநதி 2.39 ஆவது வெளியீடான ‚கடலினை வரைபவள்‘ கவிதைத் தொகுப்பு வாயிலாக மீண் டும் நாம் சாரங்காவின் எழுத்துகளை காணக் கிடைப்பது மகிழ்விற்குரியது. 37 அருமையான கவிதைகளுடன் 116 பக்கங்களில் ‚கடலினை வரைபவள் தொகுப்பு வெளியாகி உள்ளது.

நல்ல பெண் ஆகிய நான்

என் சுயத்திற்கு நல்லவள் ஆவது எப்போது?“

நமட்டுச் சிரிப்புடன்

விலகி ஓடிற்று காலம்.“

ஒரு பெண்ணின் தவிப்பை, பெண் ணின் இடரை, பெண்ணின் தலைக்கு மேலே பாறாங்கல்லாக வைக்கப் பட்ட சுமையை, பெண்ணின் மீது இச்சமூகம் வலுக்கட்டாயமாக திணித்துள்ள சுமைகளை சாரங்கா வின் கவிதைகள் வாயிலாக தரிசிக்க முடிகின்றது. சாரங்காவின் வார்த் தைக் கோவைகள் அழகானவை; சொல்லாட்சிகள் அருமையானவை; கவிதைகளில் வெளிப்படுத் தப்படும் வலிகள் ஆழமா னவை; பேசுபொருள் யதார்த்தமானவை. இத் தொகுப்பில் உள்ள பல கவிதைகள் பெண்ணின் தீராத வலிகளைப்பேசி வாசகனை சிந்திக்கத் தூண்டுகின்றன. மிருக குண மிக்க சமுதாயத்தை. ஆணை கேள்விக்கு உட் படுத்துகின்றது. அளல் மேலே இருக்கின்ற பூவாக பெண் இக்கவிதைகள் வாயிலாக புலப்படுகின்றாள். அருமை யான ஒரு கவிதைத் தொகு தியினை தந்த

குரல், சஞ்சீவி, வலம்புரி, ஞானம், ஈழநாதம், தினகரன், கலைமுகம், அமுது, வெளிச்சம், அங்குசம், திசை புதிது, மானுஷபூமி, உன்னையே நீ அறிவாய் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதினார். ‚சாரங்கா’வின் படைப்புகள் தனித்து வமானவையாகவும் ஈழத்து இலக்கிய பரப்பில் கவனத்திற்குரியவையாகவும் விளங்கின. ஈழத்து படைப்பாளிகள் வரி சையில் தவிர்த்துவிட முடியாத படைப் பாளியாக சாரங்கா விளங்குகின்றார்.

ஏன் பெண்ணென்று‘ என்னும் சாரங்காவின் முதற்சிறுகதைத்தொகுதி 2004ஆம் ஆண்டு மீரா பதிப்பகத்தின் 42 ஆவது வெளியீடாக வெளியானது. 2003 ஆம் ஆண்டு ஞானம் விருது பெற்ற நூலாக இது விளங்குவது பெருமைக்குரியது. 10 கதைகளை உள்ளடக்கி வெளியான இத் தொகுப்பில் உள்ள கதைகள் காலத்தின் பதிவு களாகக் கொள்ளத்தக்கவை. இக்கதைகள் வாயி லாக, நமது சமுதாயத்தில் உள்ள நாளாந்த பிரச்சி ளைகள், போர்ச்சூழல் மனித மனங்களிலும் வாழ் ளிலும் ஏற்படுத்திய அவலங்களும் – மனச்சோர்வு களும் பெண்ணியம் சார்ந்த பிரச்சினைகள், நாட் டுப்பற்று, வறுமை நிலை, மனிதநேசம், ஈழத்து தமி ழர்களின் ஏக்கம், பொருளாதார வசதிக்குறைவு கள் போன்றவை பேசப்பட்டுள்ளன.

சாரங்காவின் மொழி தனித்துவமானது. கதை களை நகர்த்திச் செல்லும் விதமும் காட்சி விபரிப் புகளும் வாசகர்களை ஈர்ததுவிடும் இயல்புடை யவை. யதார்த்தமாகக் கதைசொல்லும் இயல்பே சாரங்காவின் தனித்துவம் எனலாம். ‚ஏன் பெண் ணென்று‘ என்னும் கதை உளவியல் ரீதியில் அணு கப்படக்கூடிய சிறந்த கதை. போர்ச்சூழல் ஒரு பெண்ணின் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு, மன வடுவாக மாறி அவளை மனக்குழப்பம் அடையச் செய்கின்றது. மேலும் அவளை இச்சமூகமும் ஏறி மிதிக்கும் அவலத்தையும் கூறும் அற்புதமான தொரு கதை. மெல்லிய உணர்வுகளை வாசகர்

தாயகம்

எனக்கு மறுரேய் இருந்ததிஅப் போகளில்சிலம் அராங்கா போல் சொந்த மீது மீதும் ஆழாத நற்வோம் வாழ்வது ஆறுதல்

Y

சாரங்கா என்றும் கொண்டாட்டத்திற்குரிய தேவதை. இலக்கியத்திற்கான பல பரிசுகளையும் அவர் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‚ஸ்கிறிப்ட் நெற்’திரைக்கதை எழுத்தாளர் தெரிவில் இறுதிச்சுற்று வரை சென்று சான்றிதழ் பெற்றவர். மேலும் வலம்புரி நடாத்திய சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதலிடம். குரும்பசிட்டி சன்மார்க்க | நிகழ்த்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம், பரிஸ் தமிழ் சங்கம் நடாத்திய சிறுகதைப்போட்டி யில் தங்கப்பதக்கம், திருமறைக்கலா மன்றம், சுகவாழ்வு நிலையம் நடாத் திய போட்டிகளில் பரிசு, சதாவதானி கதிரைவேற்பிள்ளை கட்டுரைப் போட்டி முதலிடம், ஞானம் நடாத் திய புதிய பரம்பரை எழுத்தாளருக் கான சிறுகதைத்தொகுதிப் போட் டியில் முதலிடம் என பல போட் டிகளில் விருதுகளைப் பெற்றுள்

கடலினை வரைபவள்

மொழி, கற்பனைத்திறன், எடுத்துக் கொண்ட பாடுபொருள், கவி தையின் ஒசை ஒழுங்கு, கருப்பொருளின் தெளிவு. சொல்லப்படுகின்ற விதம் என்பவை சாராங்கா வின் கவிதைகளை மையல்கொள்ள வைக்கின்றன. மிக லாவகமாக வாசகனது மனதிற்குள் தன் கவி தைகள் வாயிலாக ஓர் உணர்வைத் தொற்ற வைத்து விடுகிறார் சாரங்கா. திருமணத்தின் பின்னான வாழ்வு எல்லாப் பெண்களிற்கும் வரமாக அமைவ தில்லை. சில பெண்களுக்கு எமது சமுதாயத்தில் திருமணம் விலங்காக அமைவதும் உண்டு. மிக அற்புதமாக இந்த விடயத்தினை ‚கடலினை வரைபவள்‘ என்ற மகுடக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். ‚சுந்தரச்சொல்‘ என் னும் கவிதையும் பெண் அடக்குமுறைக்கு உள்ளா வதை மிக அருமையாக வெளிப்படுத்துகின்றது. “சொன்னாய் நீ!

சுந்தரச்சொல் ஒன்று, சுகந்தமிகு பாரிஜாதம் போல, ‘நல்ல பெண்’ நீயென்று அதிலிருந்து கிளைத்தன, அனைத்துக் கட்டளைகளும் மரவரிப்பட வரைவாக.

“எல்லார்க்கும் எல்லாவற்றுக்கும்

சாரங்கா

தற்போது புலம்பெயர்ந்து

வாழ்ந்து வரும் இங்கிலாந்தில் தமிழ் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வருவ தோடு, எமது கலைகள், நாடகம், பேச்சு, போன்ற வற்றை தமிழ் மாணவர்களுக்கு கற்பித்து பழக்கி வளம் சேர்க்கின்றார். மேலும் மாணவர்களுக்கான கட்டுரை நூல்களையும் எழுதி வெளியிட்டு வரு கின்றார். பட்டிமன்றம், தொலைக்காட்சி நிகழ்ச் சிகள், கவிதை நிகழ்வுகளில் பங்குபற்றி வருவதோடு ஜேர்மன் STS தொலைக்காட்சியில் ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விமர்ச னங்களை தொடராக செய்து வருகின்றார். நேர் காணல்களையும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சி களுக்காக மேற்கொண்டு வருகின்றார்.

இவரது கதைகள் வேர்கள் துளிர்க்கும். இங்கி ருந்து,ஊடறு, பூபாளராகங்கள் போன்ற தொகுதி களில் இடம் பிடித்துள்ளன. அருமையான திறமை கொண்ட சாரங்கா தொடர்ந்து எழுத்துச் செயற் பாட்டில் ஈடுபட வேண்டும். அவரது எழுத்துச் செயற்பாட்டுக்கு பக்கதுணையாக இருக்கும் அவரது அன்புக் கணவர் தயானந்தன் இவ்விடத் தில் பாராட்டிற்குரியவர். மிக எளிமையாக தான் நினைத்ததை தன் படைப்பு வாயிலாக வெளிப் படுத்தும் திறமை சாரங்காவின் வெற்றி எனலாம். சாரங்காவிடம் இருந்து இன்னும் பலவற்றை எமது இலக்கிய உலகம் வேண்டி நிற்கின்றது. சாரங்கா தொடர்ந்து செயற்பட்டால் எமது இலக்கிய உலகம் மேலும் பல நல்ல அறுவடை களைப் பெறும் என்பது திண்ணம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert