கடவுள் தந்த அருள் மொழியே !

தமிழே உணர்வே
தாயே மொழியே
தாயின் உருவில்
தோன்றும் எழிலே
விழியே மொழியே
கவியே பொருளே
கடவுள் தந்த
அருள் மொழியே

நாவில் நாதம் ஒலிக்கும் -போது
நயம் பல கொண்டு நளினமாய் ஒலிக்கும்
தேன் சுவை பலதாய் நாவது சுவைக்கும்
தெள்ளு தமிழதன் துள்ளியம் விளங்கும்-இதில்
ராகம் தாளம் இணைந்தால் போதும் -அந்த
தேனிசை கேட்டு நெஞ்சமும் மகிழும்

கம்பன் பாடிய தமிழாகும்.அந்த
வள்ளுவன் போற்றிய தமிழாகும்
காலத்தின் சுவடாய் இது வாழும்
கனி இன்பத் தமிழே உலகாளும் -இதில்
ராகம் தாளம் இணைந்தால் போதும் -அந்த
தேனிசை கேட்டு நெஞ்சமும் மகிழும்

ஔவை தமிழ் கேட்டு உலகாளும் -அந்த
ஆண்டவன் கூட மகிழ்ந்தாடும்
இன்பத்தமிழ் எங்கள் மொழியாகும்
இனிய சுவை எங்கள் மொழியாகும்.இதில்
ராகம் தாளம் இணைந்தால் போதும் -அந்த
தேனிசை கேட்டு நெஞ்சமும் மகிழும்

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கருவான திகதி 21.07.2021 உருவான நேரம் காலை11.40 மணி

கவிஞர் முகில்வாணன்

சிறப்பென்று உரைத்த கவிதை !