கனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தின்’இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள் பாடும் போட்டி

கனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்லூரியுமான ‚பைரவி நுண்கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற ‚இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள் பாடும் போட்டி நிகழ்ச்சியின் இறுதித்தேர்வு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்காபுறோவி;ல் அமைந்துள்ள ஒன்றாரியோ தமிழ் இசைக் கலா மன்றத்தின் கலா மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அற்புதமான நிகழ்வில் 42 பாடக பாடகிகள் 42 தாயகப் பாடல்களைப் பாடடி அனைவரை மகிழ்வித்தும் தாயக உணர்வை தூண்டியம் அனைவரையும் உற்சாகப் படுத்தின என்றால்அது மிகையாகாது.

‚பைரவி‘ நுண்கலைக் கலைக் கூடத்தின் ஆசிரியரும் நிறுவனருமான திரு ஜெயச்சந்திரன் ஆசிரியர் தனது குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் மாணவ மாணவிகள் சகிதம் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.

இந்த விழாவின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்ற சில அம்சங்கள் சபையோரால் பாராட்டியும் போற்றியும் பேசப்பட்டன.

குறிப்பாக தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தாயகப் பாடல்களைப் பாடி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் புகழப்பெற்ற திருவாளர்கள் பொன் சுந்தரலிங்கம், வர்ண இராமேஸ்வரன், திருமதி ராதிகா சுப்பிரமணி;யம், திருமதி மேர்லின் இமானுவல் மற்றும் பாடல்கள் பலவற்றை யாத்த பண்டிதர் சா. வே.. பஞ்சாட்சரம் ஆகியோர் மேடையில் உயர்ந்த கௌரவம் வழங்கிப் பாராட்டப் பெற்றனர்.

இவர்களைக் கௌரவிக்கும் வகையில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம், கல்விச் சபை உறுப்பினர் யாழினி மற்றும் உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், அகணி சுரேஸ்;டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பெற்று இந்த கௌரவங்களைச் செய்தனர்.

அத்துடல் தாயகப் பாடல்களைப் பாடி மகிழவும் உணர்வைப் பெறவும் விரும்பும் எமது புலம் பெயர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் பல தாயகப் பாடல்கள் அடங்கிய ‚தாயகப் பாடல்கள் தொகுப்பு ஒன்றும் பைரவி நுண்கலைக் கூடத்தினரால் அச்சிடப்பெற்று இலவசமாக வழங்கப்பெற்றன.