கரும் புலிகள்…


ஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில்
கரும்புலிகளின் காவியம் சாட்சியானது.
ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து
கறுத்த வரிச் சிரிப்பாய் காட்சியானது.
இலட்சிய இதயங்களுக்கு இடி புயல்
இலக்கின் இரையான பசியானது.
இயற்கையை நண்பனாக்கிய தலையை
மனமள்ளும் வீரம் புயலின் விசையானது.
உள்ளம் உயிர் உடல் உடமையில்
நெருப்பை மூட்டி வாழ்ந்த உயிராயுதம்.
உரிமைக் கனவுடன் உலவிய நெருப்பில்
எழுதிய கவிதை விடுதலைத் தாயகம்.
பலவீன இனத்தின் பலமாய் நின்றது
படைய நிமிர்வின் பாசப் புலி முகம்.
பாதை வழி பிசகா நெஞ்சுர அழகாய்
வெற்றிகள் தந்த ஈழத்தின் வீர அகம்.
இரத்தங்கள் இங்கே அர்த்தமானது
சத்திய வேள்வியின் சங்கின் முழக்கம்.
இருளைக் கடந்த விடியலின் சத்தம்
சாவை வாழ்வாய் முழக்கிடும் முரசம்.
அலையில் தாவி அரக்கம் வென்ற
ஆயத ராகத்தில் புதுப் புதுப் பாடல்.
ஆகாயம் ஏறித் தமிழ் வீரம் சொன்ன
கரும்புலி வீரம் வாழ்வின் தேடல்…
கலைப்பரிதி.