கலைஞர் S.கணேஸ் பற்றி.(K.P.L)அவர்கள் !

பாஷையூர் புனித புனித அந்தோனியார்முத்தமிழ்மன்ற
நிர்வாக இயக்குநர், ரோமியோ ஜூலியற் பிரெஞ்சு படத்தில் நடித்தபன்முக ஆளுமை S.கணேஸ்
G.T.V தொலைக்காட்சியில் 25 தலைப்புகளில் „அரங்கமும் அதிர்வும் „என்ற நிகழ்ச்சியை தயாரித்து அளித்து பாராட்டுப்பெற்றவர்.

கூத்துக்கலையை காத்துவருபவர்களில் இவரும் ஒருவர்.
செவ்ரோன் அதிசயன் என்ற புனைபெயரில் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர்.
திரைப்பட,நாடக மூத்த நடிகர் ஏ.ரகுநாதன் அவர்களை தனது பண்டாரவன்னியன் நாடகத்தில் நடிக்கவைத்து மகிழ்ச்சி கொண்டவர்.

பாரிஸில் பலமன்றங்கள் கலைஞர்களை பாரட்டும் நிகழ்வில் கலந்து தனது கவிவரிகளால் அவர்களை வாழ்த்தி பேரானந்தம் அடைபவர்.

பாரிஸில் உருவான தம்பி கி.தீபனின் „வஞ்சனம் „குறும்படத்தில் என்னுடன் இணைந்து நடித்து உலகெல்லாம் வாழும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
பாரிஸ் பாலம் படைப்பகத்தின் உறுப்பினர்

தாயகத்தில் வாழ்ந்து வரும் நாடக,திரைப்பட மற்றும் திருமறைக்கலாமன்றத்தின் மூத்த நடிகர்களில் ஒருவரான திரு.யூல்ஸ் கொலின் அவர்களின் அன்புச்சகோதரர்.

அன்ரனிஸ் விளையாட்டுக்கழக „பவளவிழா“
„வெள்ளிவிழா‘ க்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர்.

அனைத்துத்துறை நண்பர்களுடன் அன்பை பேணிவருபவர்.
படைப்புகளுக்கான விமர்சனங்களை மற்றவர்கள் மனம் நோகாமல் முன்வைப்பவர்.

முத்தமிழ் கலாமன்றத்தில் 25 வருடகாலமாக நிர்வாக இயக்குநராக தொடர்ந்து பணிசெய்து வரும் திரு.S.கணேஸ் பாரிஸ் பாலம் படைப்பகத்துடன் இணைந்து வாழ்த்துகிறேன்.(K.P.L) 02.05.19