கவிஞர் தயாநிதியின் தட்டுப்பாடு..

ஓரப்
பார்வை
ஈர்ப்பின்
அதி விசை.

ஒற்றை
புன்னகையில்
உலகம்
மலர்ந்தது.

கனவின்
விடியலில்
மயக்கம்
கலைந்தது.

மன
இறுக்கத்தின்
பிடி
தளர்ந்தது.
எத்தனை
மாற்றங்கள்..

எண்ணத்தில்
வண்ணக் கோர்வை..
ஒற்றை
நிலாவின்
ஓரங்க
நாடகம்.

ஒத்திகை
இல்லாத
இல்லற
பரீட்சை..

தேக
மண்டலத்தில்
யாகத்தின்
ஓமக்குண்டலம்..

மேகப்
பரப்பில்
மோகச்
சிதறல்கள்..

எட்டாவது
சுரமொன்று
எட்டாமலே
மெட்டு போட்டது.

தட்டாமலே
தாளம்
தானாகவே
கையை தட்டியது.

கவிதையின்
பரி வலு
கடிவாளம்
அறுத்தது..

கல்லை
மிதித்ததால்
மிதிலையில் சீதை
உயிர்ப்பு..

கடலை
கடந்தவனும்
கை இருப்பை மறந்து
பிச்சை கேட்கின்றான்..
வரதட்ஷணை
வில்லை உடைக்கும்
இராமர்களுக்கு தட்டுப்பாடு..

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி
7.02.2022.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert