கிளிநொச்சியில் 09.11.19 அன்று கலாலயம் நாடகக்கலைஞர்கள் பாரிஸ் பாலம் படைப்பகத்-தினரால் மதிப்பளிக்கப்பட்டார்கள்

கிளிநொச்சியில் 09.11.19 அன்று கலாலயம் நாடகக்கலைஞர்கள் பாரிஸ் பாலம் படைப்பகத்-தினரால் மதிப்பளிக்கப்பட்டார்கள்.அக்குழுவின் முதன்மை செயலர்P.உமாகாந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு மற்றும் கலாலயம் கலைக்குழுமத்தை சேர்ந்த 11பதினொரு கலைஞர்களுக்கும் பாரிஸ் பாலம்படைப்பகத்-தின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவச்சின்னம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டஅதேவேளை கலாலயம் கலைக்குழுமத்தின் முதன்மை செயலர் திரு.P.உமாகாந்தன் அவர்களிடம் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் அன்பளிப்பாக இலங்கை ரூபா 50.000 (ஐம்பதினாயிரம்) கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது 09.11.19 சனிக்கிழமை பி.ப15.30 மணிக்கு தொண்டமான் நகர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வை பாரிஸ் பாலம் படைப்பகத்தின் தாயகசெயல்பாட்டாளர்கள்.
யாழ் மாவட்ட பொறுப்பாளர் செல்வன் பாலசுந்தரம் நிலக்க்ஷன்,
யாழ் மாவட்ட கலாச்சார பிரிவு பொறுப்பாளர் செல்வி.கஜனா விஜயரெட்ணம்
யாழ் மாவட்ட கலைஞர்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி நிலுஷா பாலசுந்தரம் ஆகியோர் நடத்திவைத்தனர்.

1988களில் தாயக கலைப்பண்பாட்டு கழகத்துடன் இணைந்து பல மேடை மற்றும் வீதி நாடகங்களை நடத்திவந்த கலைஞர் திரு.பி.உமாகாந்தன் அவர்கள் யுத்த காலசூழலிலும் பல விழிப்புணர்வு நாடகங்களை நடத்தியதோடு தற்பொழுது உருவாகியுள்ள போதை,பாலியல் துஷ்பிரயோகம், பாடசாலை ஒழுங்கீனம், சிறுவர் துஷ்பிரயோகம், போன்ற பல சமூக சீரழிவு ஏற்படுத்தும் சம்பவங்களை நாடகமாக்கி நம் சமூகத்தை நல்வழிப்படுத்துகிறார். அவரோடு இணைந்து சமூக அக்கறையோடு நாடகத்தில் பயணிக்கும் மற்றைய கலைஞர்களையும் வாழ்த்துவதில் பாரிஸ் பாலம் படைப்பகம் பெருமையுடன் பேரானந்தம் அடைகிறது.
கிளிநொச்சி கலாலய கலைஞர்கள்
1)P.உமாகாந்தன் (நெறியாளர், நடிகர்,போஷகர்)
2)P.L.றெஜிஸ் (மன்றப்பொருளார் முன்னணிப்பாடகர்)
3)A.செல்வராஜ் (மன்றத்தின் உபதலைவர் சிறந்த நடிகர்)
4)விமல்ராஜ் (சிறந்த இசையமைப்பாளர், கீபோட் வாத்தியக்கலைஞர்)
5)S.P.உதயரூபன்- (சிறந்த பாடகர்)
6)P.V.பாலா (Fபாட் வாத்திய கலைஞர்)
7)S.உதயகுமார் (சிறந்த நகைச்சுவை கலைஞர்)
8)S.கபிலன் (சிறந்த குணச்சித்திர நடிகர்
9)சுபநிதா (சிறந்த முன்னணி நடிகை)
10)S.கவிதா (குணச்சித்திர நடிகை)
11.)M.சுதாஜினி (நடிகை)
12)ஜெகஜோதி (நடிகை)
கலாலயம் கலைக்குழுமத்தை சேர்ந்த கலைஞர்கள் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „கலைஞர்களை காப்போம் கலையை வளர்போம்“ என்ற செயல்திட்டத்திற்கு அமைய மதிப்பளிக்கப்பட்டவர்கள்
அனைவருக்கும் உங்கள் கலைப்பணி தொடர இறையாசியுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்

„உலகெங்கும் நமது மண்ணின் மணம்கமழும் கலைக்காற்று வீசட்டும் „அது நம்மவர்களின் ஆற்றல்களை பேசட்டும் „K.P.L)12.11.19