சாந்தி நேசக்கரம் அவர்களின் நிழற்குடை“ சிறுகதைத் தொகுதி சிறப்பாக 05.08.2023 யேர்முனி டோட்மூட்நகரில் வெளியிடப்பட்டது

சாந்தி நேசக்கரம் அவர்களின் நிழற்குடை“ சிறுகதைத் தொகுதி சிறப்பாக 05.08.2023 யேர்மனி டோட்மூட்ண் நகரில் தமிழர் அரங்கு மண்டபத்தில் நூல் அறிமுக விழா இடம்பெற்றது,

இந்த அறிமுக விழாவில் அகவணக்கம் வரவேற்புரை, நிழற்குடை“ சிறுகதை ஆய்வு மற்றும் சிறப்புரைகள், கருத்தாடல்கள், வாழ்த்துரைகள் இடம்பெற்றது,

இன் நிகழ்வில் பன்முகப்பட்ட ஆளுமையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ,தொலைக்காட்சி நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள், பொதுநலச் செயல்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் இணைந்து சிறப்பித்து இருந்தார்கள்

இந்த நூல் முழுமையாக 30 கதைகளைக் கொண்ட தாகவும் யாவும் தமிழ் ஈழ வழிகளை சுமந்ததாகவும் உள்ளது,


அத்தோடு புலம் பெயர்வாழ்வில் தாகயம் நேக்கிய வலிகளையும் சாந்தி நேசக்க்ரம் தன் புலவாழ்வியலில் கண்ட விடயங்களையும் வைத்து எழுத்தாளர் துணிவுடன் கதைகளை நகர்தியுள்ளார்,

சாந்தி நேசக்கரம் அவர்களால் எழுதப்பட்ட நிழற்குடை“ சிறுகதை இந்தியாவில் வெளியிடப்பட்டபோதிலும் இந்த நூலை அவர் ஈழத்தமிழர் மத்தியில் தான் வாழும்வாழ்விடமாம் யேர்மனியில் வெளியிட நேசக்கரம் சாந்திக்கு நேசக்கரம் நீட்டிய பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், அதற்கு ஆதரவு வழங்கிய யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் இவர்களின் செயல்பாடும் எமது எழுத்தாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி நிற்பதற்கும் பாராட்டுவதோடு இதுபோன்று அறிமுக விழாக்கள் மூலம் ஆற்றல் உள்ள படைப்பாளிகள் தங்களுடைய படைப்புக்களை உருவாக்குவதற்கும் ஈழத்துகலையும், கலை இலக்கியங்களும், கலைஞர்களும் எமது தாயகம் நோக்கிய யதார்த்தங்களை எடுத்து வருவோர்க்கும் அல்லது எமது ஆற்றல் மிக்க பண்முக எழுத்தாளர்களின் விரிவடைவுக்கும் களம் அமைக்கும்,

எழுத்தாளர் சாந்தி நேசக்கரம் அவர்கள் தன்னை முளுமையாக பொதுசெயல்பாட்டிலும், தாயகப்பணியிலும், ஊடகப்பணியிலும் எமது வரலாறுகள் பதிவிடப்படவேண்டும் என்ற நோங்கில் யூரூப்வழியாகவும் பதிவிட்டு பறைசாற்றவேண்டிய பதிவுகளை எடுத்துவரும் ஓர் ஆற்றல் உள்ள ஆழுமை உள்ள எவருக்கும் அஞ்சாமல் தன் கருத்து நேரிய நோக்காக எடுத்து வரும் இவர் படைப்புகளில் உரிய கதைபேசும்,உறங்கிங்கிடக்கும் தமிழ் இனத்தை மீண்டும் தட்டி எழுப்பி தலை நிமிர மருந்தாகும் அதனால் இவர் ஆற்றல் மிக்கப்படைப்புக்கும் சிறப்பிருக்கும் தாய் மண் மணம் இருக்கும் போர் வலியின் நிஜம் இருக்கும் இவர் பணி தொட வாழ்த்துவதோடு தமிழும் மண்ணும் போல்

தலைவனும் தமிழ் இதயங்களும்போல்

உங்கள் படைப்புக்கள் தொடர வாழ்த்துறோம்.

ஊடகவியலாளர் எஸ்.தேவா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert