***செவிலித்தாய் ***

தாயாரைத்-தைரியமான கருவாய்
-சுமக்கச்செய்து
வாயார நல்லவளமான தீனிகொடுத்து
-தண்ணிகாட்டி
மேயவிட்டு,மழைக்கு ஒதுக்கி, அவள்
-மலம் அள்ளி
சேயைப்-பிரசவிக்க பல நாட்டுப்பக்குவம்
– பார்த்து
காயாத பசும் புல்லோடு பச்சரிசிக்
-கஞ்சிகொடுத்து
மேயவிடாது வீட்டில் வைத்து,
-பால் மடிநோகாது
தாயாரை கன்றோடு சேர்ந்து வைத்து,
– பாலூட்டி,
நாயரை நரியாரை தூர விரட்டி,
-கன்று வளர்த்து-என்
சேயாகவே உன்னை சீர் செய்தேன்
-என் சிங்காரமே!!
பாயப் போகும் வீரக்காளை நீயென ,
-ஊர் முழுக்க
வாயாரச்-சொல்லி புகழ் பாடும்
உன் செவிலித்-
தாயானவள் நானடா,அதை இந்த
– நாடே அறியும்
காளை நேசன்